girl childகன்னத் துவாரங்களில் எல்லாம்
காற்று அறைந்து போகிறது
தலை மீதெல்லாம் பூக்களின்
மழை இடைவிடாது பொழிகிறது
தலை உயர்த்திப் பார்க்கிறேன்
ஊர்க்காரர்களின் அணிவகுப்பு
கால் கட்டோடு தாத்தா
எங்கே நால்வருடன் முன்னே
செல்கிறார் இந்த இருட்டு வேளையில்.
தூரத்தில் நாய்களின் குரைப்பு
இடைவிடாமல் ஒலிக்கிறது.
அம்மா அனாவசியமாய்
அழைகிறார் இந்நேரத்தில்
தலை குளிக்க.
தெரு விளக்கு விட்டு விட்டு
எரிகிறது
எந்நேரத்திலும் தாத்தா
கட்டவிழ்த்து வந்துவிடப் போகிறார்
எனை உப்பு மூட்டை தூக்க
என்று தெரியாமல் பாட்டி தலை விரி கோலமாய் வாசலில்.
திட்டு வாங்கப் போகிறார் தாத்தாவிடம்.

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It