vinayagaநள்ளிரவு நேரத்தில்
கண்காணிப்பு கேமராவின்
பார்வை இருளாகி
காவலாளியின் தூக்கம்
மயக்கமானபோது
கடவுள் திருடப்பட்டார்,

நந்தனார் போலவே
உயர் வெப்பநிலைத் தீயில்
தள்ளப்பட்டதில்
சிலை வெந்துருகியும் போனார்...

காலை நடைதிறக்கும் முன்
கோவிலைச் சேர்ந்து
தன்னை உலக ரட்சகராக
நிரூபிக்க முடியாத
கையறுநிலையிலும்,

நாளை வருவதாக இருக்கும்
பேருபெற்ற பிரமுகர்களின்
பெரும் பரிகாரங்களைப்
பெற முடியாத ஏக்கத்திலும்,
அவர் ஆன்மா சாந்தியடையாமல்
சுற்றிக் கொண்டிருக்கிறது...

அதற்குப் பேய் என்று மட்டும்
பெயர் வைத்துவிடாதீர்கள்...!

- இரா.ரவிக்குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.