ஆண்டான் அடிமை வாழ்வு நிலையிலும்

மீண்டும் பண்ணை ஆண்ட போதும்

வயலிடைப் பிணைந்த உழவர்க்கு விடுதலை

முயன்று வென்ற முதலியின் அரசிலும்

உண்மை விடுதலை இன்றி மருகும்

நுண்ணிய காரணம் எதுவென வினவின்

தனிச்சொத் துரிமை கொடுமையின் ஊற்றென

இனியேனும் உணர்வாய் மனித இனமே

(ஆண்டான் அடிமைச் சமூகத்திலும், அதன்பின் நிலப் பிரபுத்துவச் சமூகத்திலும், வயலில் பிணைந்து கிடந்த உழவர்களைத் தங்கள் முயற்சியால் விடுதலை செய்த முதலாளிகளின் ஆட்சியிலும் உண்மையான விடுதலை இல்லாமல் உழைக்கும் மக்கள் தவிப்பதன், நுணுக்கமான காரணம் எது என்று கேட்டால் அது தனிச் சொத்துரிமை தான். அது தான் கொடுமைகள் அனைத்திற்கும் ஊற்றுக் கண் என்று மனித இனமே இனியேனும் உணர்ந்து கொள்வாய்.)

Pin It