என் நட்பைத் தேடி...
பயணமேற்கொள்ளும்
போதெல்லாம்
உன் நினைவு பாதை மேல்
என் பயணங்கள்...
உன்னால் வரையப்பட்ட
கவிதை தோழி ..நான்
ஆதலால் இன்னும்
வரைவாகவே நம் நட்பு
உன் அன்பைத் தேடி
மீண்டும் மீண்டும்
எனது பயணங்கள்  ..
உதிர்ந்த இடத்தில்
மீண்டும்  துளிர்க்கும்
இலை போல்
உன் நினைவு என்னுள்
எழும்போதெல்லாம்
நொடிக்கொருமுறை
பிறப்பெடுக்கிறேன் நித்தமும்
ஜனித்த நோக்கமும்
புரிந்து விட்டது இன்று
ஜனனம் ஜனனம் இனி
உன்னில் சேரும் வரை ...

Pin It