man 204தடை செய்யப்பட்ட வானொலியின்
தொகுப்பாளனாய் இருந்திருக்கிறேன்.
விற்பனைக் குறைவால் நிறுத்தப்பட்ட
இலக்கிய இதழின் ஆசிரியனாய்
இருந்திருக்கிறேன்.
பலமுறை கவிதை போட்டியில்
தோற்றுப் போகும் கவிதையின்
கவிஞனாய் இருந்திருக்கிறேன்.
இவை யாவற்றுக்கும் நான்
விரக்தி மனநிலையை அடைந்ததில்லை.
யாருமற்ற நகரத்து மொட்டை மாடியாய்
வெறிச்சோடி கிடக்கிறது.
என் பெரு வாழ்வு.
அனைத்து நிராகரிப்பின் விரக்தியில்
இதை கவிதையாய் நினைத்து
எழுத தொடங்கினேன்.
மேற்சொன்ன அனைத்துமாக கூட
கண நேரத்தில் நான் ஆகலாம்.
இது கவிதை இல்லை என
நீ நிராகரிக்கும்போது.

- வினையன்

Pin It