குலக்கல்வி முறையை ஒழித்திட வெனவே
பலரும் வேண்டப் பதவியை ஏற்ற
காம ராசர் திட்ட மிட்டார்
பாமரர்க் காகப் பள்ளிகள் திறக்க
இயலா தென்றே பார்ப்பனர் தாமும்
அயர்வுறும் படியாய்க் கணக்கிட்டுக் காட்ட,
சுந்தர வடிவேல் பார்ப்பனர் தம்மின்
தந்திரம் உடைத்து அயர்வினை நீக்கவே
தம்பணி தொடர்ந்தார் காம ராசர்

((ஒடுக்கப்பட்ட மக்கள படித்து விட்டு, பார்ப்பனர்களுக்குப் போட்டியாக வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் இராஜாஜி கொண்டு வந்த) குலக் கல்வி முறையை ஒழித்திட வேண்டும் என்று மக்கள் பலர் வேண்டியதன் பேரில் (பெருந்தலைவர்) காமராசர் (முதலமைச்சர்) பதவியை ஏற்று, பாமர மக்களுக்காகப் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று திட்டமிட்டார். (ஆனால் அப்படிச் செய்வது சாத்தியம் இல்லை என்று) பார்ப்பனர்கள் (அதிகமான செலவினங்களைக் காட்டி) அயர்வு ஏற்படும்படி கணக்கைக் காட்டிய போது, பார்பப்னருடைய தந்திரங்களை நெ.து.சுந்தரவடிவேலு உடைத்து (அப்படியெல்லாம் அதிகமாகச் செலவு ஆகாமல் பள்ளிகளைத் திறக்க முடியும் என்று காட்டி) அயர்வினை நீக்க, காமராசரும் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றினார். (அதாவது அனைத்து கிராமங்களிலும் உள்ள பாமர மக்கள் கல்வி கற்பதற்காகப் பள்ளிகளைத் திறந்தார்))

- இராமியா

Pin It