man sadஇம்முறையும் அதையே சொல்ல வைக்கின்றாய்

ஊற்றுதற்குரிய கோப்பை யூகத்தால் நிரம்பி வழிய
பேசியவை
செரிமானத்திற்கு வழியற்ற வாதங்கள்

பசிக்கும் பார்வைக்கு பதில் கேட்கின்றாய்
பழகியவை செழிப்பாக்கிய பதற்றத்தை
புசிக்கத் தருகின்றேன்

மிக நிதானமாய் சம்பவங்களைப் பிரித்து
வழியும் வாதத்தில் முக்கியெடுக்க
ஆடை விழுந்த காலத்தை
பிழையென காட்டி நகர்கின்றாய்

அடையவியலா சூட்டை மெளனத்தில் அடைத்து
யாரும் பருகாதபடி இறுக மூடுகின்றேன்

தொடர்ந்து
அதே வாதத்தை அதே த்வனியில்
ஊற்றக் கேட்கும் நாடகத்தில் நிதானமிழக்கும் கோப்பை
நொறுங்கிச் சிதற

ஒட்டவைக்கும் நியூரானில்
ஓசோன் பொத்தல்

- ரேவா

Pin It