tv maniaவீரசாகச கதைகள் படிக்கும் அப்பா
கதைக்குள் உலவி வெகு காலம் ஆகிவிட்டது
குதிரைப் படைகளையும் யானைப் படைகளையும்
சுற்றிக்கொண்டிருந்தவர் நடந்து போகிறார்
வந்தியத்தேவன்
ரோமாபுரி பாண்டியன் செழியன்
கருணாகரத் தொண்டைமான்
யவனராணி மஞ்சளகி
கடல்புறாவின் அலைகளொடு நட்பு வத்திருந்தவர்
புதினங்களில்
திரைப்படங்களில் நுழைந்து
சர்வ சாதரணமாக
வெளியே வருவார்
எம்ஜிஆர் பாடல்களை
பாடிக்கொண்டு இரவுகளைக் கழிப்பது
என் எஸ் கிருஷ்ணன்
எம் ஆர் ராதாவைப்பற்றி பேசுவது
தியாகராஜ பாகவதர் சின்னப்பா
சுந்தரம்பாள் ஜிக்கி என்றிருந்தவரை
தொலைக்காட்சி தொடர்கள் தூக்கிச்சென்றது
குரோதம் வஞ்சகம் பொறாமை நிரப்பப்பட்ட
நிழல் மனிதர்களின் கைகளில்
இரவுகள் பகல்களின் குவியல்கள்
எல்லாம் எளிய மனிதர்களிடமிருந்து
பிடுங்கப்பட்டவை
இதில் அப்பாவின் இரவு எது
அப்பாவின் பகல் எது
இரவு பகல்களை திருடுகிறவன்
திறமையாளன் என்ற
பட்டத்தோடு வெளியே திரிகின்றான்.

Pin It