house

தொழில் நட்டத்தில்
தாத்தாவின் வீட்டை
விற்ற அப்பாவிற்கு
நீண்ட பெரிய வீட்டை
கட்டிக்கொடுத்தேன்.
சொல்லி மகிழ்ந்தார்
அப்பா..

என் பேரன்
அவன் அப்பாவிற்கு
தாத்தா வீடு போல
நீண்ட பெரிய வீட்டை
கட்டிக்கொடுப்பான்.
காலம் அவனை
கடன் அடைக்க
வைத்துக்கொண்டேயிருக்கும்
என்னைப்போல...

- அம்பல் முருகன் சுப்பராயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by அம்பல் முருகன் சுப்பராயன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.