பாட்டாளி மக்களின் நவம்பர் புரட்சியும்
கூட்டாளி உழவரின் செஞ்சீனம் தானும்
தேன்றிய நாளில் வறுமையும் இன்மையும்
நான்கு திசையும் சூழ இருந்ததே
அடிமை விலங்கை ஒடித்த வினைஞர்
நெடிது பெருக்கிய வளத்தைக் காண
இளம்பிடி ஒருசூல் பத்து ஈன்றதோ
என்றே உள்ளம் வியப்பில் மூழ்குதே

(பாட்டாளி மக்களின் (சோவியத்) நவம்பர் புரட்சியும், (பாட்டாளிகளின்) கூட்டாளிகளாகிய உழவர்களின் செஞ்சீனப் புரட்சியும் வென்ற காலத்தில் நான்கு திசைகளிலும் வறுமையும் இன்மையும் சூழ்ந்து இருந்தன. (ஆனால்) அடிமை விலங்கை ஒடித்த பின்னால் உழைக்கும் மக்கள் (தங்கள் உழைப்பினால்) பெருக்கிய வளத்தைக் கண்டால், ஒரு இளம் யானை ஒரு கருவில் பத்து குட்டிகளை ஈன்றதோ என்று நினைக்கும் அளவிற்கு உள்ளம் வியப்பில் மூழ்குகிறது)

- இராமியா

Pin It