மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவில்
பலாக்கனி நினைப்பில் அடித்தது அனைய
உலாவரும் நினைப்பில் இட்லர் தானும்
சோவியத்து நாட்டில் ஏளன மாக
ஏவி விட்ட பெரும்படை தானும்
முழவின் ஒலியில் அஞ்சிய மந்தி
பழமரம் விட்டு ஓடிய தாக
இட்லரின் வாழ்வும் மறைய நேர்ந்ததே

((இரண்டாம் உலகப் போரின் போது) சுற்றுலா செல்வது போல் சென்று சோவியத் நாட்டை வென்று விடலாம் என்ற நினைப்பில் ஹிட்லர் ஏவிய பெரும் படை, ஊர்ப் பொதுவிடத்திலே இருந்த பலாமரத்தின் பெரிய கிளையிலே, இரவலர் கட்டி இருந்த முழவினைப் பலாக்கனி என்று நினைத்து ஒரு குரங்கு அதைத் தட்டியதால் எழுந்த ஒலியில் அப்பழ மரத்தை விட்டு அக்குரங்கு அஞ்சி ஓடியது போல, (அப்பெரும் படையும்) அஞ்சி ஓடியதால் ஹிட்லரின் வாழ்வு மறைய நேர்ந்தது)

- இராமியா

Pin It