*
வழியனுப்ப யாரும் வரவில்லை
இரவின் தனித்த சாலையில்
விளக்கு வெளிச்சங்களைக் குடித்தபடி
இருள் துணைக்கு வருகிறது
முணுமுணுக்கும்
இலைகளின் மஞ்சள் தீண்டிய நிறத்தை
தின்கிறது காற்றின் நாவு
சில்வண்டுகள்
அவசர அவசரமாய் குறிப்புகளை வாசிக்கின்றன
கண நேரம்
எனக்கது போதுமாயிருக்கிறது
பிழை திருத்தும் மனமற்று
என் நடையை
மொழிபெயர்த்து அலறுகிறது
கிளையின் நிழலில் அமர்ந்தபடி ஒரு கூகை
இத் தனித்த சாலை இரவில்
கொஞ்சம் அணுக்கமாய்
கொஞ்சம் வெப்பமாய்
கொஞ்சம் பரிதவிப்பாய் இருக்கிறது
இந்த இருளின் சலனம்
எனவே
வழியனுப்ப யாரும் வரவில்லை
****
-- இளங்கோ (
எனவே..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.