என் எழுதாத கவிதைகளின்
புரியாத வார்த்தைகளில்
புதைந்து கிடக்கின்றன‌
உனக்கான என் மெளனங்கள்...

என் மடியின் வெப்பங்களில்
தொலைந்து தொலைந்து
தொடர்கின்றன‌
உன் மூச்சின் ஈரங்களுக்கான
என் தேடல்கள்...

உன் மூக்கின் நுனியீரம்
இன்னும் எதிரொலிக்கிறது
என் சுவாசங்களில்...

அறிமுகமில்லா ஓர் புத்தகத்தின்
புதுப்பக்கங்களை
நீ கடந்து செல்கையில்
இடைபடும் முகம்
எனதாகத்தானிருக்கும்...

- த‌னி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.