தண்டவாளம் அருகில்
ஒரு சுற்று சுவரோரம்
சாத்தி வைக்கப்பட்டிருந்தது
உடை  பட்ட கண்ணாடி ஒன்று,
தினமும் காலையில் வேலைக்கு செல்கிறேன்
ஒரு முகத்தைக் காட்டியது
மாலையில் திரும்புகிறேன்
வேறொரு முகம் காட்டியது
உற்றுப்பார்க்கிறேன்
பெரிய முகத்தைக் காட்டியது
சற்று விலகிப் பார்க்கிறேன்
எதிரிலுள்ள மரத்தைக்காட்டியது
வளைவு கடந்து திரும்பிய போது
இன்னொரு முகத்தைக் காட்டியது
வெகுதூரம் கடந்து வந்து விட்டபிறகும்
இப்போதும் நினைக்கிறேன்
அப்போது ஒரு புதிய முகத்தைக்காட்டியது
அது வீட்டுக்குலிருந்த பொழுது
ஆசை ஆசையாய்
அம்மாவின் வியர்வை முகம்
அப்பாவின் ஆவேச முகம்
தம்பியின் மழலை முகம்
பாட்டியின் சுக்ருகு முகம்
தாத்தாவின் பொக்கை முகமென
இப்படி எத்தனையெத்தனை
முகங்களைப் பார்த்த கண்ணாடி
எனக்குள் எதை எதையோ
கதை கதையாய் சொன்னவாறே இருந்தது
ஒவ்வொரு பொழுதும் அவ்வழி
ரயிலில் கடக்கிற பொழுது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.