சுடரின் ஒளியில்
வழிந்துவிடுகிறது
தீயின் ஒரு சொல்.

அடர்த்தியேற்றி
வலிமையாகிறது அதன்
அசைவுகள்.

திரியின் தூண்டலில்
எந்த இருட்டையும்
வெளியேற்றிவிடும் அது...

ஒப்பிட்டுக் கொள்கிறது
தன்னை ஒளிரும் நிலவுடன்.

எனினும்-
நிலவு நோக்கி நீளும்
சிறு குழந்தையின் விரல்
தன்னை நெருங்கி ...
மடங்குகையில்

திடுக்குற்றுக் கரைகிறது
அறையின் இருளில்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.