1.மடங்கிய பக்கத்தில்
உடையும் பட்டாம்பூச்சி
என்ன வாசித்திருக்கும்
கடைசி கணத்தில்

********************************************************************
2.பறவைகள் கடந்து போன                                 
சுவடுகள் ஏதுமின்றி
ஆகாயம்

**********************************************************************

3.சுவரிலாச் சித்திரமாய்
மிதக்கிறது வண்ணத்துப்பூச்சி
வரைந்தவன் பெயரை
காற்றிலெழுதிக்கொண்டு

- நடராஜன் சுப்பிரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.