எப்போதுமே
ஒருவித அச்சுறுத்தலை
ஏற்படுத்துகிறது

ஒரு பேருந்து பயணத்தில்
பரிட்சயமற்றவர்
கைப்பெட்டியைத் தரும்போது....

ஒரு ரயில் பயணத்தில்
பரிட்சயமற்றவர்
உணவைத் தர முற்படும்போது...

ஒரு பொது இடத்தில்
பரிட்சயமற்றவர்
கைபேசியை பேச கேட்கும்போது...

எப்போதுமே
எவ்வித அச்சுறுத்தலின்றி
ஒரு சிறு புன்னைகையில்
எளிதில் நட்பாகிவிடுகிறது
ஒரு பரிட்சயமற்ற குழந்தை..

- மணி ராமலிங்கம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.