எதிர்பார்ப்பின்
எதுகைகளாக
பயணிக்கிறோம்
மழை தேடும் நீயும்
உன்னை தேடும் நானும்....

உன்னை சேர்ந்தால்
மோட்சம்  பெறுவேன் நான்...

நீ மழையை சேர்ந்தால்
மோட்சம் பெறும் மழை..

முக்கோண காத்திருப்பில்
மூன்று புள்ளிகளாய்
மையம் கொள்கிறோம்
நீ...  நான்.... மழை....

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.