ஆதாமைத்தவிற
மனித உறவுகள் ஏதும்
பரிச்சயப்படுத்தப்படாத
ஏடன் தோட்டத்தில் உள்ள
உயிர்களின் நிரந்தரப்பெயர்களை
ஆதாமின் ஆள் காட்டி விரல்தான்
தேவனின் பரிபூரண கிருபையால்
தீர்மானித்தது.
படைப்பின் உச்சமாய்,
அனைத்து படைப்புகளின்
ஆதாரப் பின் புலமாய்,
வர்ணணைகளுக்கெல்லாம்
அப்பாற்பட்டு,
தேவனின் கூடுதல் கவனத்தோடு
படைக்கப்பட்ட
ஏவாளைக் கண்டவுடன்
உறவுகளின் மிக உன்னதமான
புனித நட்பை மட்டும் முன்னிருத்தி
அவளின் விரல் பற்றி
வனத்தை சுற்றிக்காண்பித்தான் ஆதாம்
பிறகுதான் தோன்றியிருக்கவேண்டும்
அவனுக்கும் அவளுக்குமான
காதலும், காமமும்
சார்பு நிலை வாழ்க்கையும்
முதல் உறவு
- விவரங்கள்
- பிரேம பிரபா
- பிரிவு: கவிதைகள்
More articles by பிரேம பிரபா
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - தந்தைக்குத் திதி கொடுத்த ஈசன் (01 ஜூலை 2022)
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - கட்டியக்காரன் (27 ஜூன் 2022)
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் (11 மார் 2022)
- நட்ட கல்லும் பேசுமோ?: 4. காவிரிக் கரையோரம் (17 பிப் 2020)
- நட்ட கல்லும் பேசுமோ?: 3. உப்பிலிக்கல் (04 செப் 2019)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.