முற்றத்தில் பூத்திருந்த சூரியகாந்தி
மஞ்சள் நிறத்தை துரத்தியது

இலைகளெல்லாம் உதிர்ந்து
காற்றின் திசையில் நடந்தன

வீட்டின் எல்லா திசையிலும்
இருண்ட நிறங்கள் 

மூடிக்கொண்ட ஜன்னல்கள்
இனித் திறப்பதே இல்லையென
சபதமிட்டதென் காதில் கேட்டது

சில நாட்களுக்கு முன்
உலரவிட்ட என் ஆடைகளிலிருந்து
ஈரம் சொட்டக் கண்டேன்

சுவரில் தொங்கிய
சிரிக்கும் குழந்தையின் முகவோவியம்
திரும்பியிருந்தது மறுபக்கமாக 

திறந்துகிடந்த புத்தகத்தின்
தாள்கள் படபடக்க கையிலெடுத்தேன்
முரண், எதிரென இரு சொற்களை
விழிகள் உள்வாங்கின
புத்தகத்தை மூடி
அட்டையில் அதன் பெயரை பார்க்கிறேன்
இயல்பென்றிருந்து கொட்டை எழுத்துக்களில்!!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.