தோளை லேசாகத் தட்டி
கையைக் குலுக்கி ஆறுதல் சொல்லும் தருணம்
குறுக்கும் நெடுக்குமாக உடைகிறது
பெரும் சப்தத்துடன்

துக்கம் அடைத்துக் கொண்ட குரல்கள்
பால்கனி வழியே சிந்திக் கொண்டிருக்கிறது
இன்னும் பிடிவாதமாக சொட்டு சொட்டாய்

நிரம்பி வழியும் பிளாஸ்டிக் நாற்காலிகளின்
நிறங்கள் எப்போதும் ஒன்று போலவே இருக்கின்றன
சாமியா பந்தலின் நிழலுக்குள்

வேறு வழியற்று அத்தெருவில்
ஷட்டர் இறக்கப்பட்ட கடைகளின் வாசலில்
நின்று கொண்டிருக்கிறார்கள்
இறுதி ஊர்வலம் புறப்பட்டதும்
கடையைத் திறந்து கல்லாவைக் கொஞ்சமேனும் நிரப்ப..

*****

   --இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.