வானிலிருந்து வீழ்ந்த

அந்தப் பறவைக்கு

ஒற்றைச் சொல்லில் இருந்திருக்கிறது

விஷம்

உணரப்படாமலே.

 

பிராயம் கூடிய நட்பு

'பொசுக்கென்று' போய் விட்டது

பற்றி

மாய்ந்து மாய்ந்து

சொல்லிக்கொண்டிருக்கிறேன்

பக்கத்து வீட்டுப் பாட்டியை

இழந்துவிட்ட துக்கம் போல்.

 

'நானாவது அப்படி மாற்றிச் சொல்லியிருக்கலாம்'

'அவனாவது அதைக் கேட்காமல் இருந்திருக்கலாம்'

மரித்து விழுகிற பறவை

மனதிலா விழ வேண்டும்?

'தானாய்' மறுபடி பறக்காதா?

மந்திரம் ஜெபித்தபடி பொழுது.

- இப்னு ஹம்துன்

 

Pin It