1இருளின் நீட்சியில்
புனைகதை பூதங்கள்
அடைத்து வைக்கப்பட்ட
கண்ணாடிக்குடுவை
உருளுகையில் வெளிச்சுவரில்
ஒட்டிக்கொண்டு
கூடவே பயணிக்கும்
மணலின் அவநம்பிக்கை
2.வழியில் பழுதடைந்த
வாகனத்தைக் கடந்து செல்லும்
காலத்துரத்தல்.
வண்ணங்களின்
எள்ளல்கசியும் அந்தி
ஒற்றைக்கால்
பாதரச வியாபாரியின்
சங்கேத லிபியினை
உடைக்க வெளிப்படுகிறாள்
3.நெருப்பில் புகுந்து
வெளிவராமற்போனவளின்
முந்தானை பற்றியிழுக்கும் நீலவுடலனின்
தீண்டல் பொறுக்காமல்
தற்கொலைக்கு முயலும்
மனமொழி பயிற்றுவிப்பாளனின்
கதறலில் இன்புறும் எறும்புப்பறவை.
4 கொய்து வீசப்பட்ட தலையின்
இமையிலாக் கண்கள்
பேசுகிற வார்த்தைகளின்
முதல் தொகுப்பு.
இருந்துவிடவும்
இல்லாமற் போய்விடுவதற்குமான
சாத்தியங்களின் தேவதை.
அதன் பெயர்
அதி.
சாத்தியங்களின் தேவதை
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆத்மார்த்தி
- எழுத்துக்காரனுக்கு எப்போதாவது வாய்க்கும் இது போன்ற விழாக்கள் (18 ஆக 2014)
- ஐந்து (09 மே 2013)
- என்ன செய்யப் போகிறோம் மதுவை..? (03 ஏப் 2013)
- வதனம் அமைப்பின் நூல் விமர்சனக் கூட்டம் (15 மார் 2013)
- மகா கவனத்தின் விளைதல் பிழை (17 ஜன 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.