பலியிடுவதற்கான பீடங்களை
கட்டுமானம் செய்கிறது
குளிர் கூடிய இவ்விரவு.
ஒன்றோடொன்று
ஆலிங்கனம் செய்தபடியே
நழுவுகின்றன
ஒரு கனவும் இன்னொரு கனவும்.
விடியலுக்கானக் கீற்றை
மையிருட்டில்
வனைந்துக் கொண்டிருக்கிறது
ஒரு ஆழ் நித்திரை.
முகங்கள் உருகி
முகங்கள் மீள்-உருவாகின்றன
ஒவ்வொரு பொழுதும்.
பீடங்களினின்றும் எழும்
பிரேதங்கள்
வாகனங்கள் நோக்கி
நகர்கின்றன.
வாயகன்றுக் காத்திருக்கும்.
அலுவல்களின் இரையென
- இளங்கோ
ஆழ்நித்திரைப் பிரேதங்கள்
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.