people_235இரவுப்பாசறை முழுவதும்
முட்கள் வழித்த செடிகளின்
சீற்றத்திலிருந்தது

ஒரு தற்காப்பிற்கென்று
மறைத்துவைத்த
முனை பிளந்த முட்களும்
வலுவிழந்து
சரிந்து வீழ்கிறது
முதல் தீண்டலிலேயே

சுணங்கித்தவிக்கும்
தொட்டாற்சிணுங்கியின்
இலைகளில் படிந்திருக்கிறது
இறுமாப்பாய் கொஞ்சம்
மஞ்சள் மகரந்தங்கள்

ஒப்புதல் துளியும் இல்லாத
அந்தப்பசியிரவில்
வானமெங்கும் தெறித்து வீழ்கிறது
ஒரு கோடி சூல்கள்
புணர்ச்சியின் நிறைவில்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.