இட்டிலியும் தோசையும் தின்றுகொண்டிருக்கிறது
More articles by சுவாதி ச முகில்
- துப்புரவு ஒழுகு (08 ஆக 2011)
- தொலைநிலைக் கலவி (07 ஆக 2011)
- வாக்குமூலம்-2 (05 ஆக 2011)
- வாக்குமூலம் (08 மே 2011)
- காக்கை, நரி மற்றும் பாட்டிக்கான வடை (16 பிப் 2011)
பசித்த புலி-
தாயைத் தின்ற சிங்கத்தை
போலீசில் பிடித்துக் கொடுக்கிறது
குட்டி முயல்-
காக்கையிடம் ப்ளீஸ் சொல்லி
வடை வாங்கித் தின்கிறது நரி
ஆமையின் முதுகிலேறி
வலம் வருகிறது போட்டிக்கு வந்த முயல்
ஆக்டோபசுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன
டாமும் ஜெர்ரியும்....
*********************************
கதை சொன்ன களைப்பில்
தூங்க ஆரம்பிக்கிறது குழந்தை-
********************************
புதுக் கதைக்குள்
புகுந்து கொள்ளும் தங்களின் முறைக்காக
தலைமாட்டில் காத்திருக்க ஆரம்பிக்கின்றன
மற்ற விலங்குகளெல்லாம்!