குழந்தை அம்பாரி
ஏற மறுத்தது
மிட்டாயை வாங்க
மறுத்தது
பொம்மையை தூர
எறிந்தது
அதன் பார்வை துழாவத்
தொடங்கியது
அதன் கண்களில்
நீர் கோர்த்தது
மழலை மொழியில்
ம்மா என்றது
அம்மாவின் சேலையணிந்து
சித்தி அதன் அருகில் வர
அந்த வாசனையில்
தன்னை இழந்தது
அம்மா வரும் வரையில்
அந்த நறுமண நெடியை
நுகர்ந்து கொண்டே
உறக்கத்தில் ஆழ்ந்தது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.