அரசுக்கட்டில் ஏறி ஆண்டிட
வாக்கைத் தந்தால் ஐந்தாயிரம் !
ஆழ்கடல் தன்னில் அநாதையாகி
வாழ்வைத் தந்தால் ஐந்துலட்சம் !
சூழ்கடல் பாரத தேசந்தன்னை
நாளும் பொழுதும் கொள்ளையடிக்க
அமைச்சராக்கி பதவியைத் தந்தால்
“அலை”யெனப் பெருகும் ஆயிரங்கோடி!
பாயிரம்பாடி தாள்பணிவோர்க்கு
தாயினுஞ்சாலப் பரிந்து அளிக்கும்
பட்டம்பதவிகள் பலப்பலநூறு !
இவையெலாம் தாழ்வென எண்ணிடும் தமிழன்
வீதியில் வந்து போர்க்குரல் தந்தால்
ஆவிதுடிக்க தடியடி கோடி!
இதுதான் தமிழா, இன்றைய நாடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.