வெப்சைட்டில்

விளம்பரம் செய்து

இன்டர்நெட்டில்

நிதி திரட்டி

ஹாலோஜென்

விளக்குகள் பரப்பி

பிளாஸ்டிக் மோல்டிங்

நாற்காலிகள் நிரப்பி

மெட்டல் டிடெக்டர்

சோதனை முடித்து

செல்போனில்

தகவல் அறிந்து

ஹை டெக் காரில்

வந்து இறங்கி

கார்ட்லெஸ் மைக்

கையில் பிடித்து

இன்சுலின் தெம்புடன்

பேஸ்மேக்கர் துடிப்புடன்

திருவாய் மலர்ந்து

சுவாமிகள் அருளினார்

“அறிவியல் எல்லாம் அபத்தம்

ஆண்டவன் செயலே அற்புதம்.”

- அ.குமரேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.