பக்கத்து வீடு பற்றியெரிந்த போது
நாம் அமைதிப் பூங்காவில்
பூப்பறித்துக் கொண்டிருந்தோம்

பணம் கொடுத்து ஓட்டுகள்
வாங்கப் பட்டபோது
பதறவில்லை

வருமானம் மானம் எதுவும் உயர
வழியில்லாதவர் விதியை மட்டும்
நொந்து திரிகிறார்

மாற்றமின்றி தோழா!
இந்தத் தைத் திங்களிலும்
பால் மட்டுந்தான் பொங்கி எழும்

More articles by சத்யானந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.