மின் விளக்கு


இத்தனை காலம்
வாயோயாமல் பேசிவிட்டு
திடுமென திக்கத்துவங்கியது
அந்த மின் விளக்கு...

அதன் பலவீனப்பட்ட
இருமல் சப்தங்கள்
அதன் ஆயுளை
குறிப்பெடுத்திருந்தன...

ஏற்கனவே காலாவதியாகிப்போன‌
மாத்திரைகளால் அதன் ஆயுளை
நீட்டிக்க‌ இயலவில்லை...

அதன் கடைசி மூச்சுக்கு
காத்திருக்கும்வரையிலான காலம்
அதைப் புதைப்பதற்கான‌
இடத்தை தேர்வு செய்ய‌
உதவலாம்...

 - ராம்ப்ரசாத், சென்னை(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.