உடைத்தெறியப்பட்ட பொம்மைகள்

கிழித்தெறியப்பட்ட காகிதங்கள்

டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்

ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்

பென்சில்களாலும் கிரேயான்களாலும்

கிறுக்கப்பட்டு நவீன ஓவியங்களாய்

காட்சியளிக்கும் சுவர்கள்

அவ்வப்போது

மரித்துவிடும் என்

மனதை இதழ் அமுதத்தாலும்

மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்

இவர்கள் எனக்கே எனக்காய்

அழகியதொரு உலகை படைக்கும்

அழகிய பிரம்மாக்கள்.......

- சக்திவேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.