கூட்டிப் பெருக்கிய
அலுவலகத் தரையில்
எச்சில் துப்புவதில்
துவங்குகிறது எங்கள் கலகம்.
உங்கள் மனைவியுடனான
யாத்திரையில்
எங்கள் தெருவோரப் புணர்ச்சி
பெரும் இடையூறு.
எங்கள் வளர்ப்புப் பன்றிகளின்
மலமொட்டிய வாயினின்று
வந்தமரும் ஈக்களை
என்ன செய்யப் போகிறீர்கள்?
அடித்த சாராயத்தில்
அவிழ்ந்து விழும் கைலி தாண்டி
உள்ளாடையற்ற உறுப்புகளை
திட்டிக்கொண்டே மேயும்
உங்கள் மனைவிமார்களின்
கண்களுக்குப் புண்ணியம்.
ஒருநாள்
எதிரெதிர் நேரலாம்
உங்கள் சாமி ஊர்வலமும்
எங்கள் சவ ஊர்வலமும்.
எதிரெதிர்...
- விவரங்கள்
- அன்புச்செல்வன்
- பிரிவு: கவிதைகள்
More articles by அன்புச்செல்வன்
- தூக்கிலிடுபவரின் குறிப்புகள்: மரண தண்டனை குறித்த ஒரு பார்வை (08 செப் 2026)
- பூமணியின் சிறுகதைகள்: விலக்கப்பட்ட மனிதர்களின் குரலும் கரிசல் வாழ்வியலும் (02 செப் 2026)
- வரலாறு என்னும் கதை - நூல் அறிமுகம் (31 ஆக 2026)
- திரைவிமர்சனத்தின் எல்லைகளும் மார்க்சிய இயங்கியலும் (25 ஆக 2026)
- சிங்கள சிறுகதைகள் - நூல் மதிப்புரை (20 ஆக 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.