கடைசிக் குவளையின்போது
கடும் நெருக்கடி
கண்டிப்பாய் வந்து சேர்ந்து விடுகிறது...
குடிப்பதை முடிப்பதா
அல்லது
தொடங்கியிருக்கும் இன்னொரு
விவாதத்திற்காக
மீண்டும் தொடங்குவதா?

வளராத மீசையை
அடிக்கடி
முனை திருகிக் கொள்கிறேன்...
ஏதொன்றும் பயனில்லாத போதும்.
திருகிய மீசை
எனக்குச் சொல்லப்பட்ட சாதியையோ
சாதி சொல்லி
எல்லாருக்காகவும்
திருகப்பட்ட மீசையையோ
பரஸ்பரம்
நம்பியிருக்கிறோம்...
எப்படியும்
நீ மீசையையோ
திருகிய மீசையையோ
சந்திக்க நேரிடும் - உன்
கண்களுக்கு மிகப்
புதிதாய் இருக்கும்
என் மீசையற்ற முகம்
சொல்லிச் செல்லும்
நாம் தொடங்குவோம் மீண்டும்
அந்தக் கடைசிக்
குவளையிலிருந்து - என்று!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.