ஈரம் காயாத கடற்கரை மணலில்
More articles by அவனி அரவிந்தன்
- அவர்களுக்குத் தெரியாதது (20 மே 2010)
- குளிர்படுத்தப்பட்டக் குழம்பி (06 பிப் 2010)
- ஒரு பகல் ஒரு இரவு (10 ஜன 2010)
- நீரில் வளரும் வளையங்கள் (06 டிச 2009)
- உயிரின் உருவம் (02 நவ 2009)
பதிந்த கால் தடம் போல
என் உள்மனதின் சுவடாக
நீ நிறைந்திருக்கிறாய்,
நான் விரும்பாவிட்டாலும் கூட....!
-
-
பொங்கி நுரைக்கும் பெருங்கடலின்
அடியாழத்து மீன் கூட்டம்
நெளிந்து நீந்தி இசைக்கின்ற
ஏக்கம் நிறைந்த பாடலொன்று
அலையாக மிதந்து
எதிர்பார்ப்பின் துகள்கள் பரப்பிய
கரையின் நீட்சியில்
இலக்கற்று பாவும்
என் துவண்ட கால் விரல்களை
நக்கி ஈரப்படுத்துகிறது...