ஆகி விட்டன

ஆறு ஆண்டுகள்

தாத்தா இறந்து

 

விட்டுச் சென்ற

நிலங்கள்

வீட்டு மனைகளாகி விட

 

வங்கிச் சேமிப்புகள்

வாரிசுகளின்

கடனடைத்து விட

 

நிர்வகித்த

நிறுவனம்

அவர் பெயர்

சொல்வதை

நிறுத்தி விட

 

அவ்வப்போது

பிள்ளையிடம்

அம்மா காணும்

அடையாளமாய்

 

“அப்படியே

தாத்தா கோபம்”

 

- க. ஆனந்த்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.