என் சரீரம் வறண்டு சுருங்குவதை
தலை மயிர்கள் நரைத்து வருவதை
காண் உலகு மீதான பார்வை
கூர் மழுங்குவதை
வாசிப்பின் விசால‌ம் குறுகுவதை
காகிதத்தில் பதிவாகும் எழுத்துகள்
அதன் உருவம் இழந்து கிடைப்பதை
அநேக நேரங்களும்
தனிமையோடு கரைவதை
நிகழ்வுகள் நிதானமிழப்பதை,

ஒருபோதும் பொருட்படுத்தாமல்
ஒவ்வொரு பொழுதாய்
கடந்து போகிறேன்
எனது பால்யத்தை
நினைத்துக்கொண்டு
 
-இரஞ்சித் பிரேத்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.