முதலாளித்துவமும், அது ஏற்படுத்தி இருக்கும் நவீன அறிவியலின் வளர்ச்சியும் இந்திய சமூகத்தில் சாதியின் மீதான தளைகளை ஒரு பக்கம் உடைத்துக் கொண்டிருந்தாலும், சனாதன சக்திகள் அதை உடையாமல் கட்டிக் காப்பாற்ற அனைத்து தளங்களிலும் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

சனாதன தர்மமே இந்து தர்மம், அதைக் கடைபிடித்து வாழ்வது ஒவ்வொரு இந்துவின் புனிதக் கடமை, அந்த புனிதக் கடமையை நிறைவேற்றும் ஜீவாத்மா மட்டுமே மோட்சம் பெற்று பரமாத்மாவிடம் சரணடையும் என பகவத் கீதை போன்ற குப்பைகளில் கடவுளின் வாயாலேயே சொல்வது போல எழுதி வைத்து, குலத்தொழிலை நிலைநிறுத்திய கும்பல் இன்றும் தைரியமாக அதே வேலையை சட்டப்படியே செய்யத் துணிந்திருக்கின்றது.

இப்படியான அயோக்கியத்தனமான செயலுக்கு எதிராக கொதித்தெழ வேண்டிய இந்திய சமூகம் பெரிய சலசலப்புகள் ஏதுமின்றி அமைதியாக அதை கடந்து போய்க் கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டில் இருக்கும் முற்போக்கு இயக்கங்கள், திமுக போன்றவற்றைத் தவிர இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு இந்த குலத்தொழில் இழிவைப் பற்றிய எந்தப் பார்வையும் இல்லை என்பது அதன் எதிர்ப்பற்ற நிலையில் இருந்தே புரிந்து கொள்ள முடிகின்றது.modi vishwakarma yojanaமதராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, 1953-ல் மாகாணத்தில் உள்ள கிராமப்புற துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, கிராமப்புறக் குழந்தைகள் பாதி நாளை பள்ளியிலும், மீதி நாளை தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்கவும் செலவழிக்க வேண்டும்.

அதாவது முடிவெட்டுபவரின் மகன் முடிவெட்டுவதையும், துணி துவைப்பரின் பிள்ளை துணி துவைப்பதையும், செருப்பு தைப்பவரின் பிள்ளை செருப்பு தைப்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் அந்த புதிய கல்வித் திட்டம்.

இதை எதிர்த்து பெரியார் பல போராட்டங்களை நடத்தினார். இதையடுத்து, ராஜாஜி தன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், முதல்வரான காமராஜர், அந்தத் திட்டத்தையே ரத்து செய்தார்.

இப்படியான வரலாறு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு இல்லையோ, என்னவோ?! அதனால்தான் மோடி அரசு கொண்டு வந்திருக்கும் விஸ்வகர்மா யோஜனா என்ற குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக பெரிய அளவிலான எதிர்ப்பை தமிழ்நாடு மட்டுமே பதிவு செய்திருக்கின்றது.

கைவினைக் கலைஞர்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையில் மோடி அரசு கொண்டு வந்திருக்கும் இந்த விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தில் 18 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதில் சேர்க்கப்பட்டுள்ள பரம்­ப­ரைத் தொழில்­கள் 1. தச்­சர், 2. படகு தயா­ரிப்­பா­ளர், 3. கவ­சம் தயா­ரிப்­ப­வர் 4. கொல்­லர், 5. சுத்­தி­யல் மற்­றும் கரு­வி­கள் தயா­ரிப்­ப­வர் 6. பூட்டு தயா­ரிப்­ப­வர், 7. பொற்­கொல்­லர், 8. குய­வர் 9. சிற்பி, 10.காலணி தயா­ரிப்­ப­வர், 11. கொத்­த­னார் 12. கூடை, பாய், துடைப்­பம் தயா­ரிப்­ப­வர் 13. பொம்மை தயா­ரிப்­ப­வர், 14. முடி திருத்­து­ப­வர் 15. பூமாலை தொடுப்­ப­வர், 16. சல­வைத் தொழி­லா­ளர் 17. தைய­லர், 18. மீன்­பிடி வலை தயா­ரிப்­ப­வர் போன்றவை ஆகும்.

இந்த 18 தொழில்களில் முக்கியமான சில தொழில்கள் விடுபட்டிருப்பதை நீங்கள் எளிதாகக் கண்டுகொள்ளலாம். அந்தத் தொழில் மணியாட்டும் பார்ப்பன பூசாரிகளின் தொழில், மடப்பள்ளியில் புளியோதரை கிண்டும் தொழில் போன்றவை.

ஏன் மோடி அரசு இந்த புனிதத் தொழிலை பட்டியலில் சேர்க்கவில்லை?

இத்திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களுக்கு எந்தவொரு பிணையும் இல்லாமல் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும் என்றும், முதல் தவணையாக ரூ. 1 லட்சமும், அடுத்த தவணையாக 5% வட்டியுடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புனித பார்ப்பன ஆன்மீகப் பணிக்கும் ஒதுக்கி இருந்தால் புதிதாக மணியும், பிச்சை எடுக்க தட்டும், மடப்பள்ளிக்குத் தேவையான பாத்திர பண்டமும் வாங்குவார்களே! ஏன் மோடி அரசுக்கு அரிய வகை ஏழைகளாக இருக்கும் இவர்களைப் பற்றி கவலை இல்லையா?

உண்மை அவர்கள் கவலைப்படும் இடத்தில் இல்லை என்பதுதான். நம்மை எல்லாம் குலத்தொழில் செய்ய ஊக்குவித்து இன்னும் பல நூறாண்டுகளுக்கு இழிவானவர்களாக இருக்க வேண்டும் என விரும்பும் தூய ஆன்மாக்கள், பார்ப்பனக் கூட்டம் தன்னுடைய சாதிக் கடமையை நிறைவேற்றுவதில் இருந்து என்றோ விடுவித்து விட்டன.

கடல் கடந்து செல்லக்கூடாது என்ற குறைந்த பட்ச கட்டுப்பாட்டைக் கூட தூக்கி எறிந்துவிட்டு நாட்டைவிட்டுப் போனவர்கள் இன்று உலகின் பல முன்னணி கார்ப்ரேட் நிறுவனகளில் CEOக்களாக இருக்கின்றார்கள். முன்னாள் பெப்சி தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, கூகுள் அதிகாரி சுந்தர் பிச்சை போன்றவர்களே அதற்கு சிறந்த உதாரணம்

2003 ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர்களில் 1.5 சதவீதம் மட்டுமே தலித்துகள் என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியாவின் மேம்பட்ட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமாகக் குடியேறியவர்கள் பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதியினர்தான்.

இந்தியாவில் எடுத்துக் கொண்டால் இந்திய மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனக் கும்பல், அரசுப் பணிகளில் 70 சதவீதத்தைக் கைப்பற்றி வைத்திருக்கின்றது. குடியியல் பணிகள், மாநில முதன்மைச் செயலாளர்கள், ஆளுநர்கள், துணை ஆளுநர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என எங்கு பார்த்தாலும் உச்சிக் குடுமிகளாக காட்சி அளிக்கின்றார்கள்.

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்களில் 88 சதவீதம் முதல் 92 சதவீதம் வரை பார்ப்பன, உயர் சாதியைச் சேர்ந்தவர்களே ஆவார்கள்.

இப்படி தங்களின் விகிதாச்சாரத்தைவிட பல மடங்கு அரசுப் பதவிகளையும், தனியார் துறையில் உயர் பொறுப்புகளை கைப்பற்றி வைத்திருக்கும் கும்பல்தான், இன்று உங்களுக்கு கடன் தருகின்றேன், போய் செருப்பு தை, முடிவெட்டி, துணி துவை, பானை செய் எனப் படுகுழியில் தள்ளப் பார்க்கின்றது.

இந்­தத் திட்­டத்­தில் மூலம் நீங்கள் பயன்பெற வேண்டும் என்றால், பரம்­பரை பரம்­ப­ரை­யாக அந்­தத் தொழிலை செய்­ப­வர்­க­ளாக நீங்கள் இருக்க வேண்­டும். செருப்பு தைப்­ப­வர் பரம்­பரை பரம்­ப­ரையாக இந்­தத் தொழிலை செய்து வரு­கி­றேன் என சான்­றி­தழ் வாங்கி வர வேண்­டும். இந்­தத் தொழி­லாளி ஒரு­வர் தனது தொழிலை விரி­வு­ப­டுத்தி, வேறு ஒரு பொருளை தயா­ரித்­தால் அவ­ருக்கு நிதி உதவி கிடை­யாது என அறிவித்து இருப்பதன் மூலம் நாகரீக மனித சமூகத்திற்கே சவால் விட்டிருக்கின்றார்கள் சாதிவெறியர்கள்.

ஒருவன் செருப்பு தைப்பவன், முடி வெட்டுபவன், துணி துவைப்பவன் என சான்றிதழ் கொடுப்பதற்கு அப்படி கொடுக்கும் சாதிவெறி நாயின் முன் நீங்கள் ஒரு அடிமையைப் போல நின்று உங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் உடம்பில் ரத்தத்திற்குப் பதிலாக சனாதன சாக்கடை ஒடும் இழி பிறவிகளின் திட்டமாகும்.

பார்ப்பன பாசிஸ்ட்கள் கட்டமைக்க நினைக்கும் கலாச்சார இந்து தேசியம் என்பது இதுதான். அவனவனுக்கு மநு விதித்திற்கும் குலத்தொழிலை செய்ய வேண்டும். எப்போதுமே பார்ப்பனன் தன்னுடைய பிறப்பின் அடிப்படையிலான சிறப்பு சலுகைகளை அனுபவிக்க வேண்டும்.

ராமராஜ்ஜியத்தில் சம்பூகனின் தலையை வெட்டி சாதிய நீதியை நிலை நாட்டிய கும்பல் இப்போது 13000 கோடியை ஒதுக்கி சட்டப்படியே அதை நிலை நிறுத்தப் பார்க்கின்றது.

இரா­ஜாஜி குலக்­கல்வி திட்­டத்தைக் கொண்டு வந்­த­போது “நாம் மேன்­மை­ய­டை­யக் கூடாது என்­ப­தற்­கா­கவே இரா­ஜாஜி இந்த திட்­டத்­தைக் கொண்டு வரு­கி­றார். நம்மை உத்­தி­யோ­கத்­துக்கு லாயக்கு ஆக்­கக் கூடாது என்­ப­தற்­காக கொண்டு வந்த திட்­டம் இது” என்று சொன்­னார் பெரி­யார்.

“ஆயி­ரக்­க­ணக்­கான வரு­டங்­க­ளாக கூலிக்­கா­ரன் மகன் கூலிக்­கா­ரன், மேளம் அடிக்­கி­ற­வன் மகன் மேளம் அடிப்­ப­வன், உழு­ப­வன் மகன் உழு­ப­வன் என்றே வைத்­து­ விட்­டார்­கள். வெள்­ளைக்­கா­ரன் வந்­து­தான் 200 ஆண்­டுக்கு முன் இதனை மாற்­றி­னான். இதெல்­லாம் தலை­யெ­ழுத்து என்று நினைக்க வைத்­து ­விட்­டார்­கள். இந்­தத் தலை­யெ­ழுத்தை மாற்ற கவ­லைப்­பட்­டது நமது இயக்­கம் மட்­டும்­தான். வண்­ணார் மக­னும், நாவி­தன் மக­னும் படித்­து­விட்­டால் உயர்­ஜா­திக்­கா­ர­னுக்கு மரி­யாதை போய்­வி­டும். அத­னால்­தான் குலத் தொழி­லையே செய்­தால் போதும் என்­கி­றார்­கள்” என்­று பார்ப்பன குள்ளநரிக் கூட்டத்தின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்தினார்.

இன்று மீண்டும் பார்ப்பன குள்ளநரிக் கூட்டமும் அதன் அடிமைகளும் சேர்ந்து குலத்தொழில் இழிவை நம்மீது சுமத்தப் பார்க்கின்றார்கள். நிச்சயம் பெரியார் மண் அதற்கு மரண அடியை கொடுக்கும்.

- செ.கார்கி

Pin It