kumbh melaஉத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கு அந்த மாநிலத்தை ஆளும் சங்கி அரசு அனுமதி கொடுத்ததால் ஏப்ரல் 12 திங்கட்கிழமை லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிந்திருக்கின்றார்கள்.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே கும்பமேளா திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என அரசு முதலில் கூறினாலும் லட்சக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் அங்கு குவிவதால் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த முடியாமல் அங்கிருக்கும் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்

கங்கையில் குளித்தால் தங்களின் பாவங்கள் தீரும் மோட்சம் கிடைக்கும் போன்ற நம்பிக்கையே இப்படி மக்களை எந்தவித கொரோனோ அச்சமும் இன்றி கும்பமேளாவில் குவிவதற்குக் காரணமாக இருக்கின்றது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக ஓவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில்தான் இந்துமத வெறியர்களை திருப்திபடுத்த மாநிலத்தை ஆளும் பிஜேபி அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் ஏப்ரல் 12 அன்று வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 1,68,912 பேருக்கு கொரோனோ தொற்று உண்டாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1,70,209 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனோ நோய்தொற்று மிக வேகமாக பரவிவரும் இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையில்தான் மாநிலத்தை ஆளும் பிஜேபி அரசு கும்பமேளாவிற்கு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் வரும் நாட்களில் மிக மோசமான பாதிப்பை இந்தியா சந்திக்கப் போவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மருத்துவர்களின் எச்சரிக்கையை பற்றியோ, மக்களின் உயிரை பற்றியோ இந்த பாசிஸ்ட்களுக்கு துளியும் அக்கரை இருந்தது இல்லை என்பதையும், இவர்களின் நோக்கம் மதத்தை வைத்து தங்களை வளப்படுத்திக் கொள்வது மட்டுதான் என்பதையும் நாம் பல முறை பார்த்திருக்கின்றோம்.

இப்போது லட்சக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளாவிற்கு அனுமதி கொடுத்த சங்கிகளின் அரசுதான் கடந்த ஆண்டு இஸ்லாமியர்கள் தான் கொரோனோவை பரப்பியதாக கூச்சமே இல்லாமல் சொல்லிவந்தது.

கடந்த ஆண்டு மார்ச் 8-10, 12-15 ஆகிய தேதிகளில் டெல்லி நிஜாமுதீனில் இரண்டு இஸ்திமாக்கள் நடைபெற்றன. அதில், சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,850 பேர் பங்கேற்றனர். இவர்களுடன் தமிழகம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனோ தொற்று உள்ளதா என விமான நிலையத்தில் ஒழுங்காக சோதனை செய்யாததால் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெளிநாட்டினர் மூலம் இதில் கலந்துக் கொண்ட இந்தியர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டது.

தங்களுக்கு கொரோனோ தொற்று இருப்பது தெரியாமல் அவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினார்கள். இதில் எள் அளவும் கொரோனோவைத் திட்டமிட்டே பரப்ப வேண்டும் என்ற சதியோ, தீய எண்ணமோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதற்கும், திடீரென லாக்டவுன் அறிவித்து அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியதற்கும் முழு பொறுப்பும் மத்திய அரசையே சாரும். ஆனால் சங்கி கும்பல் முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பதுபோல் ஒட்டுமொத்த பழியையும் முஸ்லிம்கள் மீது போட்டது.

இப்போது கும்பமேளா ஒரு பெரும் வெடிப்பாக இருக்கப் போகின்றது. கும்பமேளாவில் கலந்துகொண்டவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் போது நிலைமை மிக மோசமடையலாம். தப்லிக் ஜமாத்தை கொரோனோவிற்கு காரணமாக கூறிய சங்கிகள் இப்போது கொரோனோ நோய் தோற்று வேகமாக பரவும் சூழ்நிலையில் நன்கு தெரிந்தே மக்களை பலி கொடுக்கத் துணிந்த பிஜேபி அரசை விமர்சிப்பார்களா? நிச்சயமாக விமர்சிக்க மாட்டார்கள்.

காரணம் இந்தியாவில் ஜனவரி 31 அன்று முதல் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு, மார்ச் 22 அன்று ஒரு நாள் ஊரடங்கு அறிவித்து மோடி மணி அடிக்கச் சொல்லும் வரை அரசு எந்த உருப்படியான நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

எடுக்கவில்லை என்பதோடு மோடி அரசு மார்ச் 24 அன்று ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கும் முன்னர் இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பல நிகழ்ச்சிகள் நடந்தன.

குறிப்பாக பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் முன்னால் அமெரிக்க அதிபர் உரையாற்றினார். பிப்ரவரி 22 முதல் 25 வரை கோவா திருவிழா, பிப்ரவரி 13 உலக புனித ஆவி திருவிழா, பிப்ரவரி 21 அன்று ஈசா யோக நடத்திய மகா சிவராத்திரி போன்றவை நடைபெற்றன.

மோடி அரசு ஊரடங்கு அறிவித்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி அன்றுதான் அயோத்தியில் பெரும் மக்கள் கூட்டத்தோடு இராமருக்கு கோவில் கட்டும் பணிகள் தொடங்கின. மார்ச் மாதம் 7ஆம் தேதி அன்று திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் நாடெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு மார்ச் 24-ல் நடைபெறவிருந்த மற்றொரு இஸ்திமாவை தப்லிக் ஜமாத் ரத்து செய்தது. இப்போது சொல்லுங்கள் நேர்மை தப்லிக் ஜமாத்திடம் இருக்கின்றதா? இல்லை சங்கிகளிடம் இருக்கின்றதா? என்று.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்தியதாக நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்த்லாவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரைக் பிடிக்க தனிப்படை அமைத்த சங்கிகளின் அரசுதான் வெட்க மானமே இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளாவிற்கு அனுமதி கொடுத்துள்ளது.

தப்லிக் ஜமாத்திற்கு சென்று வந்தவர்கள் சிலரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், போன்கள் சுட்ச் ஆப் ஆகி உள்ளது எனவும் அவசர கோலத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பொய்யாக்க 24 மணி நேரத்தில் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட அனைவருமே தாமாகவே சென்று மருத்துவமனைகளில் ஆஜராகி, தங்களின் நேர்மையை நிரூபித்தார்கள்.

இத்தனைக்கும் மாநாட்டில் கலந்துக் கொண்ட பெரும்பாலான நபர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதற்கும், அதைச் சரிவர கண்டறியாமல் மெத்தனமாக இருந்ததற்குமான முழு பொறுப்பு மத்திய பிஜேபி அரசையே சாரும்.

கும்பமேளா மட்டுமல்ல தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் நடந்த தேர்தல் பரப்புரைகளில் மோடியும் அமித்ஷாவும் ஆயிரக்கணக்கான மக்களை எந்தவித சமூக இடைவெளியோ, முகக்கவசமோ இல்லாமல் கூட்டி ஓட்டு கேட்கின்றேன் என்ற பேரில் கொரோனோவை பரப்பிவிட்டு இன்று கூச்சமோ குற்றவுணர்வோ இல்லாமல் நாட்டு மக்களுக்கு அறிவுரை சொல்கின்றார்கள்.

உண்மையில் இவர்களுக்கு இந்த நாட்டு மக்களின் உயிர் மீது துளி அளவும் அக்கரை இல்லை என்பதுதான் உண்மை. அப்படி இருந்திருந்தால் லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி கொடுப்பார்களா?.

மக்களிடம் மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனோ குணமாகும் என சொல்லிவிட்டு தடுப்பூசி வந்ததும் முதல் ஆளாக சென்று போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு வெளியே வந்து மீண்டும் மக்களுக்கு மாட்டு மூத்திரத்தை பரிந்துரைக்கும் கேடுகெட்ட ஈனர்கள்தான் சங்கிகள்.

இப்போது அதே சங்கிகள்தான் கங்கையில் குளித்தால் பாவம் போகும், மோட்சம் கிடைக்கும் என சொல்லி அப்பாவி மக்களை கொரோனோ சாவை நோக்கி தள்ளி இருக்கின்றார்கள். ஏற்கெனவே இந்தியாவில் 1,70,209 பேர் உயிரிழந்துள்ளனர்.

கும்பமேளாவால் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரப் போகின்றது. சங்கிகளின் அரசியல் எப்போதும் மனித உயிர்களை கொன்று குவிப்பதில்தான் உள்ளது என்பது இதன் மூலம் மேலும் நிரூபணமாகி இருக்கின்றது.

- செ.கார்கி

Pin It