உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. நம்மவர்களின் தேச பக்திக்கு எல்லையே இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் பேரைச் சொல்லியே ஓட்டுக்காக அரசியலின் மூலம் பிச்சைகாரப் பிழைப்பு நடத்திவரும் நம் நாட்டு தேசப் பக்தர்களின் தேசியப் பற்றை நினைத்தால் தான் தற்போது புல்லரிக்கிறது எனக்கு. நாட்டுப்பற்று?,இறையாண்மை? குறித்தெல்லாம் அவர்கள் வாய்கிழிய பேசும் பேச்சுக்கள் சும்மா சொல்லக் கூடாதுங்க அந்தளவுக்கு தேசப்பற்று.

கிழக்கு வங்காளம், காவிரி, முல்லைப்பெரியாறு, ஒகனேக்கல், பாபர் மசூதி, உத்தராஞ்சல், உத்தராகாண்ட், சட்டீஸ்கர் என பொங்கி வழிந்த தேசியமும், இறையாண்மையும் இப்போது ஈழம் குறித்து நாய் போல குறைத்துக் கொண்டிருக்கிறது மஹாராஷ்டிராவின் மண்ணின் மைந்தர்களை மறந்துவிட்டு, இப்படி ஒரு தரப்பினர் என்றால் இன்னொரு தரப்பினரோ நாங்கள் செய்வதும், சொல்வதும் மட்டுமே சரி என்று ஈழத்திற்கு பல விளக்கங்களையும், விபரங்களையும் கட்டுரை, கட்டுரையாய் எழுதி தள்ளிக் கொண்டும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அறிக்கைகளையும் அள்ளிவிட்டு கொண்டிருக்கின்றனர்.

ஏந்த ஒரு நாட்டு மக்களுக்கும் கிடைக்காதது தமிழனாய் பிறந்தவனுக்கு மட்டும் கிடைக்கிறது. தமிழனாய் மட்டும் இல்லாது வேறு இனத்தவனாய் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் ஈழத்தில் நிம்மதியும், உரிமையம் எப்போதே, எளிமையாய் கிடைத்திருக்கும். ஆனால் தமிழகத்துக்கு அரசியலாரின் ஓட்டு அரசியலும், பதவி சுகமும், திகில் படங்களில் வரும் காட்சிகளைப் போல போய்க் கொண்டிருக்கிறது. உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை. ஆனால் தமிழனக்கு என்று எந்தவொரு சொந்த அடையாளமும் இன்றுவரை இல்லை என்பதே ஜனநாயகம் பேசும் போலிகளினால் தான்.

ஆசை நாயகன் அஜீத்குமாருக்கும், ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கும் தமிழனைப் பற்றியும், அவனுடைய வீரம் செறிந்த வரலாற்றைப் பற்றியும் என்ன தெரியும். காமிராவிற்கு முன் ரானுவ உடை அணிந்து பாகிஸ்தான் தீவிரவாதியை சுட பழகிக் கொண்ட ஆக்ஷன் கிங்கிக்கு ஈழத் தமிழனை சுட்டால் இங்கே ஏன் போராட வேண்டும் எனக் கேட்கத் தோன்றுமா?. மலையாள பார்ப்பனன் அஜீத்குமாருக்கு தாயகத்தின் போராட்டத்தைப் பற்றி தெரிந்தால் இங்கு ஏன் போராட வேண்டும் என கேட்கத் தோன்றுமா?. நீங்கள் என் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் என்று கேட்ட பத்திரிகையாளரிடம் முதல்வர் வசூலிக்கும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு சின்னத்திரை கலைஞர்களிடம் பணம் வசூலிக்க என வாய் கூசாமல் பேசிய சின்னத்திரை கலைஞர்களுக்கு தெரியுமா புரட்சியைப் பற்றி. வரலாறுகளை படித்திருந்தால் தானே இந்த வந்தேறிகளுக்கு புரியும்.

இவர்களாவது பாவம் பிழைப்புக்காக வேடம் போடவேண்டியுள்ளது. ஆனால் தமிழனாய் பிறந்து நல்ல தமிழில் பேசி தமிழனை ஓட்டாண்டியாய் ஆக்கி ஏ.சி ரூமுக்குள் சுகபோகத்துடன் ஏகபோக வாழ்க்கை நடத்திவரும் நம் வெள்ளை சட்டை வேந்தர்களின் வெத்து வேட்டுக்களை முதலில் நாம் ஒழித்தாக வேண்டும். தேசியம் பேசும் கதர்சட்டைகாரர்களும், தேசியத்தோடு இந்துத்துவா பேசும் வேதாந்திகளோடு, தான் செய்தால் சரி அதை மற்றவன் செய்தால் தவறு என வர்ணித்துவரும் புரட்சிகளுக்கு சொந்தக்காரர்களும், பெரியாரின் கரம் பற்றி, அண்ணாவின் அடியொற்றிவர்களும் என்று ஆதாய நோக்கில்லாமல், கொள்கை கத்தரிக்காய் என்று பேசாமல், என்று மக்களின் பிரச்சனைகளுக்கு பெருவாரியான மக்களின் உணர்வகளுக்கு மதிப்பளித்து ஓட்டுக்களை குறிவைக்காமால் செயல்படுகிறார்களோ அன்று தான் ஓரளவகு;கு ஜனநாயகம் என்பது சாத்தியம்..

மாநிலத்திற்கு ஒரு கொள்கை பேசும் நம் தேசியத் தொண்டர்களுக்கு இங்கே மகாராஸ்டிரம் இந்தியாவில் இல்லாத மாநிலம் என்று அறிவித்துவிட்டார்களோ?. மராட்டியர்களைக் காக்கவே தோன்றியதாக தாக்கரேக்கள் குடும்பம் மாறி மாறி மண்ணின் மைந்தன் கோஷத்தை போட்டுக் கொண்டே உள்ளனரே, எங்கே நாம் பேசாவிட்டால் நம்மை மராட்டியர்கள் புறக்கணித்துவிடுவார்கள் என்று அங்குள்ள தேசியத் தொண்டர்களும் ஒத்து ஊதி வருகிறார்களே. நடவடிக்கை எடுக்க மாநில நிர்வாகமம் தயங்கி வருகிறதே?. அங்கெல்லாம் வராத தேசியமும், இறையாண்மையும் மட்டும் தமிழன் என்று சொன்னாலே கூடவே ஓடி வந்துவிடுகிறதோ நம்மவர்களுக்கு, ஏன் மராட்டியன் மட்டும் தான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறானா?, தமிழனுக்கு உப்பை பற்றியே தெரியாதா?.

இவர்களின் தேச பக்தியையும், நாட்டுப் பற்றையும், இறையாண்மையையும் மராட்டியர்களின் மாவீரன் தாக்கரேக்கு முன் காட்டட்டுமே. முடியாது அவர்களால் ஏனென்றால் அங்குள்ளவர்கள் மராட்டியர் என்று ஒரே குடையின் கீழ் வந்து இவர்களை புறக்கணித்து விடுவார்கள், ஆனால் தமிழனைத் தான் நாம் தேசியப் பாலூட்டி எல்லை கடந்த இறையாண்மையை காட்டி சாதி, மதம் என வகுப்புவாரியாக பிரித்து விட்டானே. ஆதனால் தமிழனுக்கு மட்டும் தான் இறையாண்மை, தேசியம், கத்தரிக்காய், சுண்டைக்காய் எல்லாம்.

மராட்டியத்தில் தன் இனத்தான் அல்ல. தன் மாநிலத்தான் பாதிக்கப்பட்டுவிட்டான் என்பதற்காக ரோசமுள்ள அரசியலார் ராஜிநாமா கடிதங்களை கொடுத்தனர் உரியவர்களிடம். ஆனால் நம்மவர்களால் ராஜிநாமா என்று மிரட்டவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் கூறி பிரச்சனையை கைகழுவத்தான் செய்யும். ஏந்தவிதமான நடவடிக்கையை எடுத்துவிட்டது. குண்டு மழை நின்றுவிட்டதா?. தமிழன் நிம்மதியாய் தூங்கிவிட்டானா? இவர்களின் பற்றை நினைத்தாலே வேதனை தான். ஓர் இணையத்தின் கட்டுரையில் நண்பர் கதிர் சயந்தன் என்பவர் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் இன்றும் என்னை ஏன் இன்னும் தமிழன் இப்படியே இருக்கிறான் என சாட்டை அடியாய் அடித்துக் கொண்டிருக்கிறது.

83ல் ஈழ தமிழர்களின் படுகொலையைப் பற்றிய கவலை எனக்க இல்லை என்று கூறிய ஜெயவர்த்தனேயின் வாhத்தைகள், 95 ல் வந்தேறி குடிகளைப்பற்றி எனக்க என் கவலை என்ற திருமதி சந்திரிகா, இதையெல்லாம் விட ஒரு சிறுபான்மை இனம் அளவுக்கு அதிகமான உரிமைகளை கேட்கக் கூடாது என்று ரானுவ தளபதியின் பேட்டிகளுக்கு இடையே ரகுமான் எழுதிய “வந்தேமாதரம்” என்ற பாடலை கேட்கம் போது என்னுள் தோன்றும் என்னை அறியாத சிலிர்ப்பு நான் வாழும் “நமோ நமோ லங்கா” தேசிய கீதத்தை கேட்கும் போது வருவதில்லை. இந்த வரிகளுக்கு மேல் எனக்க தெரியாது. அதை பற்றிய கவலையும் எனக்கு தேவையில்லை, என்று கூறியுள்ளார். இதை படித்த பொழுது என்னுள் நான் சற்று இறந்தே போய்விட்டேன்.

ஜனநயாகம் பற்றியும், இறையாண்மை பற்றியும் போலியாக வாய் கிழிய பேசிவரும் நம் தேச பக்தர்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் கதிர்சயந்தனின் வார்த்தைகள் உரைக்கப்படவேண்டும். ஒரு நாட்டில் வாழும் குடிமகன் அந்த நாட்டை தன்னுடையதாக நினைக்க முடியவில்லை என்றால் எந்தளவிற்கு அவனும், அவனைச் சார்ந்த சமூகமும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவனை கல் நெஞ்சக் காரனாக அல்லவா மாற்றியிருக்கிறது சிங்கள தேசம். ஆனால் தமிழனாய் பிறந்து, தமிழனால் வளர்ந்து, தமிழனால் பிழைப்பும் நடத்திக் கொண்டிருக்கும் என் தேசத்து சொந்தங்கள் தமிழனை காட்டிக் கொடுப்பதையும், பழித்துப் பேசுவதையுமே வழக்கமான கடமையாக கொண்டுள்ளனர். தேசியம் பேசுபவர்களைவிட முதலில் தமிழன் பின்னரே மற்ற தெல்லாம் என்பவனால் நாட்டிற்கு எந்தவிதமான ஆபத்து ஏற்படப் போவதில்லை. ஆனால் இவர்களுக்கு பல முத்திரைகளைக் குத்திக் கொண்டே தங்கள் வயிற்றை கழுவி வருகின்றனர் இன்றைய நம் தேசியவாதிகள்.

ஓட்டுமொத்தமாக நாம் அலசிப் பார்போமேயானால் போலித்தனமாக தேசியம் பேசுபவர்களைவிட தங்கள் தாயகத்து மக்களுக்காக எல்லாவற்றையும் செய்துவரும் தாக்கரேக்கள் எவ்வளவோ சிறந்தவர்களே. அதனால் இனி உலகத்தின் பல மூளைகளிலும் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழனையும், தமிழகத்தில் போலி மாயைகளிடம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் தமிழனையும் காப்பாற்ற வேண்டுமானால் தமிழனத் தலைவர்களும், தமிழர் தலைவர்களும், சமத்துவ போராளிகளும், புரட்சி புயல்களும், புரட்சித் தலைவிகளையும், ஏன்
தமிழர்களை காப்பதற்காகவே அவதார மெடுத்தவர்களும் தேவையில்லை. எங்களுக்கு தேவை ஒரு தாக்கரே மட்டுமே?...........

-மு.ஆனந்தகுமார்

Pin It