இந்தியை மத்திய அரசு தமிழகத்தில் திணிப்பதற்குத் தமிழகத்தில் இருக்கும் பார்ப்பன பூணூல் கும்பலே முன்னிலையில் நிற்கின்றது. இன்று இந்திய மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்தப் பூணூல் கும்பல் தான் காரணமாக உள்ளது. அந்தப் பூணூல்தான் வந்தேறி ஆரிய பார்ப்பன கும்பலுக்குத் தலைகால் தெரியாமல் ஆடும் தைரியத்தைக் கொடுக்கின்றது. இந்த நாட்டின் பூர்வகுடி மக்களை வேசி மக்கள் என்றும், ஐந்தாம் சாதி என்றும் ஒதுக்கி வைத்தது அந்தப் பூணூல்தான், மன்னர்களுக்கும் அதன் பின் வெள்ளைக்காரனுக்கும் மாமா வேலை பார்த்து, தன்னை அரசியல் ரீதியாக வலுவாக தக்க வைத்துக் கொண்டதும், சட்டப்படி இந்தியாவின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு சூத்திரன் (வேசி மகன்) பட்டம் கட்டி, அவனை இந்தச் சமூகத்தில் என்றுமே சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் வாழும் வாய்ப்பைப் பறித்ததும் அந்தப் பூணூல்தான். வேதங்களையும், தர்ம சாத்திரங்களையும் உருவாக்கி அதை மக்களை மிரட்டி நம்பவைத்து இன்று வரையிலும் உழைக்காமல் சோறு தின்பதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டதும் இந்தப் பூணூல்தான். சுருக்கமாக சொல்வதானால் ஆரிய பார்ப்பன வந்தேறிகளின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் துணிந்து செய்வதற்குக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ்தான் இந்தப் பூணூல்.

 hindi milestoneஇந்த ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு எது பிடிக்குமோ அதைத்தான் ஒட்டுமொத்த இந்திய மக்களும் கடைபிடிக்க வேண்டும். அவனுக்கு ராமன் பிடிக்கும் என்றால், அதை ஒட்டுமொத்த இந்திய மக்களும் தன்னுடைய கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனுக்கு மாட்டுக்கறி பிடிக்காது என்றால், இந்தியாவில் உள்ள எவனும் மாட்டுக்கறி தின்னக்கூடாது, அவனுக்கு சமஸ்கிருதம் தெய்வ பாஷை என்றால், அந்தச் செத்த மொழியை அனைவரும் கற்க வேண்டும். அவனுக்கு முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும், தலித்துகளும் விரோதிகள் என்றால், அவர்களைத் தவிர்த்த ஒட்டுமொத்த இந்திய மக்களும் தன்னைத் தேச விரோதி பட்டத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்களை எதிர்க்க வேண்டும். இப்போது பார்ப்பன மயமாக்கப்பட்ட இந்தியை நம் மீது வலுக்கட்டாயமாக திணித்தால் பேசாமல் அதை வரவேற்று வாழ்த்துச் சொல்ல வேண்டும். இல்லை என்றால் நம்மை தேசவிரோதி, இந்தியாவுக்கு எதிரானவன் என்று முத்திரை குத்தும் இந்த வந்தேறி பார்ப்பனக் கும்பல்.

 பல்வேறு தேசிய இன மக்கள், ஆயிரக்கணக்கான மொழிகள், மாறுபட்ட பண்பாட்டுக் கூறுகளுடனும் வாழும் மக்களை தன்னுடைய பார்ப்பனியக் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல முழுமையாக மாற்றியமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தித் திணிப்பு. இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான மொழிகளுக்கு இல்லாத எந்த ஒரு சிறப்புத் தகுதியும் இந்திக்குக் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இந்தியைவிட பழமையான, இலக்கிய, இலக்கண வளம் நிறைந்த மொழிகள் பல உள்ளன. அவர்கள் யாரும் தங்களுடைய மொழியை மற்ற மாநில மக்கள் கண்டிப்பாக கற்க வேண்டும் எனச் சொல்வதில்லை. அவரவர்கள் மொழி அவரவர்களுக்குப் பெரியது, சிறந்தது. தான் பேசும் மொழியைப் பற்றிய பெருமித உணர்வு எல்லா மொழி பேசும் மக்களுக்கும் இயல்பாய் இருக்கும் ஒன்று. அதை நிராகரிக்கும்போது, நிச்சயமாக நிராகரிக்கும் அமைப்புகளை அந்த மொழி சார்ந்த மக்கள் நிராகரிக்கவே செய்வார்கள். இந்தியா என்ற நாடு தோன்றுவதற்கு முன்பே இங்கு பல்வேறு தேசிய இனங்கள் உருவாகிவிட்டன. பொதுவான மொழி, நிலப்பரப்பு, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்தும் கொண்ட ஒரு தனி நாடாக இருக்க அனைத்து வகையிலும் தகுதிவாய்ந்த ஒன்றாக அவை இருக்கின்றன.

 அப்படி இருக்கும் போது வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட இந்த இந்தியா என்ற நாட்டை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. வெள்ளைக்காரனுக்கு மாமா வேலை பார்த்து, அவனிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பார்ப்பன அயோக்கியர்கள் தங்களது மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள ராணுவத்தைப் பயன்படுத்தி மிரட்டி இந்த நாட்டை இன்னும் இந்தியாவாகவே வைத்திருக்கின்றார்கள். அப்படி வைத்திருப்பதால் யாருக்குப் பயன் என்றால், இன்று இந்தியா முழுவதும் அதன் வளங்களைப் பெருமளவு கட்டுப்படுத்தும் பார்ப்பன- பனியா கும்பலுக்குத்தான். இந்தியா முழுவதும் ஒரே மொழியையும், ஒரே பண்பாட்டையும் நிறுவுவதன் மூலம் தனது நீண்ட நாள் கனவான நூறுசதவீதம் பார்ப்பனியம் என்ற நிலையை அதனால் எட்ட முடியும். மற்றபடி இந்தி படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் பச்சை அயோக்கியத்தனமான பொய்.

 இந்தி பேசும் வட மாநிலங்களில் பணிபுரியும் தமிழ்த் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும், அதே போல தமிழ்நாட்டில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டாலே இந்த உண்மை புரிந்துவிடும். ஒரு மொழி கூடுதலாகத் தெரிந்து கொள்வதாலேயே ஒருவன் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குப் போக முடியும் என்று சொல்வது மூளை மழுங்கி முட்டாள்களின் வாதமாகும். லாரி ஓட்டுநர்கள், டீக்கடைகாரர்கள் போன்றவர்கள் குறைந்தது மூன்று நான்கு மொழிகளைத் தெரிந்து வைத்திருகின்றார்கள். அதற்காக அவர்கள் எல்லாம் அம்பானியாகவும், அதானியாகவுமா ஆக முடிந்தது?

இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்துகொண்டு இருக்கின்றார்கள். ஆனால் வட மாநிலத்தைச் சேர்ந்த இந்தி பேசும் அரசியல்வாதிகள் அக்கிரமத்திற்காகவே திட்டமிட்டு மற்ற மாநிலங்களின் மீது இந்தியைத் திணித்து வருகின்றார்கள். குறிப்பாக பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பலும், காங்கிரசும் இதையே தான் வேலையாகக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் பாராளுமன்றத்தில் இனி இந்தி பேசத் தெரிந்த அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசுப் பிரமுகர்கள் அனைவரும் இந்தியில் பேச வேண்டும் என்றும், மத்திய அரசின் கல்வி நிலையங்களான கேந்திரிய வித்தியாலயா மற்றும் சிபிஎஸ்ஈ போன்றவற்றில் 10 வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு இந்தியைக் கட்டாயப் பாடமாக வைக்கவும் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பள்ளிகள் இந்தியைக் கற்பித்துதான் வருகின்றன. ஆனால் அவை விருப்பத் தேர்வாக இருந்தது. ஆனால் இனி அது கட்டாயமாக்கப்படும். எப்படியாவது இந்தியை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு இதுபோல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்குவதால் நிச்சயம் இந்தியைக் கற்றுக் கொள்ள முடியாது என்பதற்கு ஆங்கிலமே ஒரு நல்ல சான்று. ஒன்றாம் வகுப்பில் இருந்து முதுகலை அல்லது அதற்கு மேலும் ஆராய்ச்சி படிப்புவரை படித்த பல பேர் இன்னமும் கூட ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தெரியாதவர்களாகவும், அவர்களிடம் யாராவது பேசினால் புரிந்துகொள்ளும் திறனற்றும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இதற்காக நாம் அவர்களின் மேல் குறை சொல்ல முடியாது. ஒருவரின் அறிவு வளர்ச்சி என்பது அவனது தாய்மொழியில் கற்பதால் மட்டுமே சாத்தியப்படும் என உலகில் பல கல்வியாளர்கள் உறுதியாகச் சொல்கின்றார்கள். அதை மறுப்பதென்பது அவர்களின் அறிவு வளர்ச்சியின் மீது செலுத்தப்படும் வன்முறை ஆகும். எந்த ஆங்கிலேயனும் மற்ற மொழிகளில் தங்களுக்கான அறிவியல் நூல்களைப் படிப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் கூட வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் படிக்க நிர்பந்திக்கப் படுகின்றார்கள். இதனால் இயல்பாக கற்க வேண்டிய கல்வி அவனுக்குப் பெரும் சுமையாக மாறுகின்றது. இதனால் பல மாணவர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையை சீக்கிரம் முடித்துக்கொண்டு ஓடிவிடுகின்றார்கள். இப்போது இந்தியை வேறு அவர்கள் மீது திணித்தால் கல்வி என்பது அவர்களுக்கு சொல்லொண்ணா துயரமாக மாறிவிடும்.

 இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பொய்யான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி, இந்தி பேசாத மாநில மக்கள் மீது தனது பார்ப்பனிய சித்தாந்ததை மறைமுகமாகப் பரப்ப பார்ப்பன கைக்கூலிகள் வேலை செய்துகொண்டு இருக்கின்றார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் நூற்றுக்கணக்கான விவசாயிகளைக் கொன்றுபோட்ட கொலைகாரர்கள் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நம்மைப் பார்த்து ‘இந்தியைப் படி’ என்று சொல்கின்றார்கள். இந்தியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்றால், இந்திபேசும் மாநிலங்களில் உள்ள பிச்சைக்காரர்கள் அனைவரும் இன்று கோடீஸ்வரர்களாக இருந்திருப்பார்கள்.

ஒரு மொழி என்பது கருத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான ஊடகமே தவிர அது அறிவு அல்ல. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் உள்ள பல பிழைப்புவாதிகள் ஆங்கிலத்தையும், இந்தியையும் கற்பது அறிவு என்று நினைத்துக்கொண்டு தங்களையும் தாங்கள் சார்ந்த சமூகத்தையும் அழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எனவே தமிழக மக்கள் மீது மட்டும் அல்லாமல் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியையும், செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் பரப்புவதில் முன்னிலையில் நிற்பவர்கள் பார்ப்பன அயோக்கியர்கள்தான். முதலில் இவர்களுக்குப் புத்தி புகட்டிவிட்டால் மற்ற பார்ப்பன அடிவருடி கும்பலை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதனால் உடனடியாக நாம் செய்ய வேண்டியது போர்க்கால அடிப்படையில் இங்கிருக்கும் பார்ப்பன பூணூல் கும்பலுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை நடத்துவதுதான். ஒன்று இங்கிருக்கும் பார்ப்பான் தமிழனையும், தமிழையும் ஏற்றுக்கொண்டு ஒழுக்கமாக சமத்தாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ‘இந்தியைப் படி, சமஸ்கிருதத்தைப் படி’ என்று தன்னுடைய பார்ப்பன பயங்கரவாதத்தைப் பரப்பிக்கொண்டு இருந்தால் வேறு வழியே இல்லை, அவர்களுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர.

- செ.கார்கி