Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தமிழகத்தில் வெளிவரும் பல நாளிதழ்கள் குறிப்பாக தினமணி, தினமலர், தமிழ் தி இந்து போன்றவை பார்ப்பன உச்சிக்குடுமி பேர்வழிகள் நடத்தும் பத்திரிக்கைகள் என்பது நமக்குத் தெரியும். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் பத்திரிக்கைத் துறையைப் பெருமளவில் கட்டுப்படுத்துபவர்களாகவும் இந்தப் பார்ப்பனர்கள் தான் இருக்கின்றார்கள். இது ஏதோ தற்செயலான நிகழ்வு என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். ஒரு சமூகத்தைத் தனது கட்டுப்பாட்டில் தான் நினைத்த மாதிரி ஆட்டுவிக்க வேண்டும் என்றால், வெறும் இராணுவத்தையும், காவல் துறையையும், நீதி மன்றங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு அதைச் செய்துவிட முடியாது. கருத்தியல் ரீதியாக தனது அடிமைத்தனத்தை அவர்களை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும்.

tamil hindu logoவரலாற்றில் பார்ப்பனியம் தனது மேலாண்மையை நிலைநிறுத்திக்கொள்ள வெறும் தர்ம சாஸ்திரங்களை மட்டும் நம்பி இருக்காமல் நரகம், சொர்க்கம், ஆத்மா, பிரம்மம் போன்ற கட்டுக்கதைகளைப் பரப்பி, மக்களை மிரட்டி கருத்தியல் ரீதியாகப் பணிய வைத்தது. இதன் மூலம் சமூகத்தில் பார்ப்பனன் என்றைக்குமே உழைத்துச் சாப்பிட நிர்பந்தம் ஏதுமற்று புல்லுருவிகளாக வாழ வழி ஏற்படுத்தப்பட்டது. சங்கரன் முதல் மகாயானிகள் வரை இந்தப் பணியைச் சிறப்பாக செய்து முடித்தார்கள்.

மக்களை தாங்கள் பார்ப்பானைவிட கீழான சாதி என்றும், அவனது கோட்பாடுகளைக் கடைபிடிப்பதன் மூலமாகவே தாங்கள் வாழ்க்கையில் மோட்சம் அடைய முடியும் என்றும், மீறினால் நரகத்தில் தள்ளப்படுவோம் என்றும் மக்கள் கருத்தியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள செய்யப்பட்டார்கள். பார்ப்பன மேலாண்மையைப் புனிதப்படுத்த எழுதப்பட்ட அனைத்து நூல்களிலும் இதே கருத்துதான் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. சமூகத்தில் ஒரு சிறுபான்மையாய் இருந்த பார்ப்பன வர்க்கம், பெரும்பான்மை இந்திய மக்களை தனது பல்வேறு விதமான அச்சுறுத்தும் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி மிரட்டி பணிய வைத்தது. தன்னுடைய ஆயுதங்களைக் கொண்டு இத்தனை கோடி மக்களை பார்ப்பனியத்தால் ஒருபோதும் வீழ்த்தி இருக்க முடியாது. இன்றும் அது அந்த மக்களை தனக்குக் கீழ்ப்படுத்தி வைத்திருக்கின்றதென்றால், அதற்கு ஒரே காரணம் மக்களின் கருத்தியல் தளத்தில் ஆழமாக தனது பார்ப்பன புரட்டு நூல்களின் வழியாக அதைப் பரப்பியதுதான். இன்று எச்சிக்கலை ராஜாவால் தைரியமாக சொல்ல முடிகின்றது, “என் கை அசைவிற்கு எதையும் செய்யத் துணிந்த ஆயிரம் பேர் என்னிடத்தில் தயாராக இருக்கின்றார்கள்” என்று. இந்த பார்ப்பன வெறியனின் கருத்துக்கு ஆடத் தயாராக இருக்கும் அந்த ஆயிரம் பேரும் நிச்சயம் பார்ப்பனியத்திடம் ‘வேசிமகன்’ பட்டம் வாங்கியவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனாலும் அவர்களால் ஒரு நியாயமான மனுதர்மப் படி நடந்துகொள்ளும் ஒரு நல்ல வேசிமகனாக இருக்க முடிகின்றது என்றால், அதற்குக் காரணம் கருத்தியல் தளத்தில் எச்சிகலை ராஜா, அவர்களை காயடித்து வைத்திருப்பதுதான்.

 சமூகத்தை ஆளும் கருத்துக்கள் அனைத்தும் ஆளும்வர்க்கத்தின் கருத்துக்கள் என்று மார்க்சியம் சொல்கின்றது. அந்தக் கருத்துக்களை எப்போதும் நிலைநிறுத்தி வைத்திருப்பதுதான் ஆளும்வர்க்கத்தின் வேலை. அதற்கு அது அனைத்துவிதமான கருவிகளையும் பயன்படுத்துகின்றது. தனது கருத்துக்கு ஏற்றாற்போல பாடத் திட்டங்களை திருத்துவது, ஆளும்வர்க்கத்திற்குச் சேவை செய்யும் கைக்கூலி எழுத்தாளர்களை உருவாக்கி, அவர்கள் மூலம் தனது சித்தாந்தத்தையே கலை இலக்கிய வடிவில் பரப்புவது என அவை அனைத்தையும் செய்கின்றன. இந்திய சுதந்திரத்தில் பார்ப்பனர்கள் பெரும் அளவில் கலந்துகொண்டு வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அது இன்றுவரை அவர்களின் கருவியாகவே செயல்பட்டு வருகின்றது. முடிவுகள் எடுக்கக்கூடிய அனைத்து மட்டங்களிலும் அவர்களின் ஆதிக்கமே கோலோச்சி இருக்கின்றது. இது ஒன்றும் கற்பனையான கூற்று அல்ல.

 இந்திய மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பன கும்பல், அரசுப் பணிகளில் 70 சதவீதத்தைக் கைப்பற்றி வைத்திருக்கின்றது. குடியியல் பணிகள், மாநில முதன்மைச் செயலாளர்கள், ஆளுநர்கள், துணை ஆளுநர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என எங்கு பார்த்தாலும் உச்சிக் குடுமிகளாக காட்சி அளிக்கின்றார்கள். இந்திய நிர்வாகப் பணி அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் பார்ப்பனர்கள். இன்னும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களே. இது எல்லாம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைப்படி அமைந்தது அல்ல. தனது பிறப்புரிமையின் அடிப்படையில் அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பதவிகள். இந்தியாவில் இருக்கும் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் போன்றவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, இது எப்படி சாத்தியமானது என்பதில்தான் பார்ப்பன சூழ்ச்சியை நாம் புரிந்துகொள்ள முடியும். இது எல்லாம் ஏதோ சுதந்திரத்திற்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் கிடையாது; அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கீடுகள்.

 தமிழகத்தில் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் எதற்காக வரலாற்றில் தோற்றுவிக்கப்பட்டதோ, அதற்கான காரணங்கள் இன்னும் உயிர்ப்போடு இருப்பதைத்தான் புள்ளிவிவரங்கள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இது நம்மைப் போன்ற சாமானிய மக்களுக்கு வேண்டுமானால் தெரியாத விவரங்களாக இருக்கலாம். ஆனால் பத்திரிக்கைத் துறையில் புள்ளிவிவரங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. இன்று அரசுப் பதவிகளில் குறைந்த பட்சமாவது தலித்துகளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதி மக்களும் அமர்ந்திருக்கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் அம்பேத்கரும், பெரியாருமே அன்றி இங்கிருக்கும் எந்தப் பார்ப்பானும் அல்ல. இன்னும் சொல்லப்போனால் இன்றுவரையிலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடர்ந்து அயோக்கியத்தனமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது இந்தப் பார்ப்பனக் கூட்டம் தான்.

 தமிழ் தி இந்து நாளிதழின் நடுப்பக்க கட்டுரை ஆசிரியர் சமஸ் அவர்கள் 5/04/2017 அன்று “அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?” என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தார். அதில் திராவிட இயக்கங்களில் பார்ப்பனர்களின் 3% எண்ணிக்கைக்கு ஏற்ப பிரநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். இதற்கு அவர் பெரியாரை வேறு உதாரணம் காட்டுகின்றார். “அந்தந்தச் சமூகங்களின் மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: அந்த வகையில் பிராமணர்களுக்கும் 3% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்” என்று கூறியிருக்கின்றார் என்கின்றார். உண்மைதான் பெரியார் அப்படித்தான் சொன்னார். ஆனால் நிலைமை அப்படித்தான் இருக்கின்றதா? பெரியார் சொன்ன கணக்குப்படி பார்த்தால் அவன் 100க்கு 3 பேர்தான் அரசு வேலையில் இருக்க வேண்டும். ஆனால் 70 சதவீதம் இருக்கின்றானே... என்ன செய்யலாம் சமஸ் அவர்களே? நீதியும் நேர்மையும் நிரம்பிய உங்கள் ஆர்.எஸ்.எஸ். மூளையில் இருந்து ஒரு யோசனை சொல்லுங்கள். 3 சதவீதம் பேரை விட்டுவிட்டு மீதமுள்ள 67 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பிவிடலாமா? இல்லை அவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச ஆடு, மாடுகளைக் கொடுத்து, திரும்ப கைபர் கணவாய் வழியாகவே அவர்களது பூர்வீக பூமிக்கு அனுப்பிவிடலாமா? சொல்லுங்கள் பார்ப்பன பாதம் நக்கி சமஸ் அவர்களே!

திராவிட இயக்கங்கள் பார்ப்பனர்களிடம் துவேஷம் வளர்க்கின்றது என்று சொல்கின்றீர்கள். எந்தத் திராவிட இயக்கத்துக்காரர்கள் போராடும் தமிழர்களைத் தேசத் துரோகிகள் என்று சொன்னார்கள் என்று சொல்லுங்கள். ஏற்கெனவே திமுக, அதிமுக போன்ற போலியான திராவிட அரசியல் இயக்கங்கள் பார்ப்பனர்களை அண்டித்தான் அரசியல் செய்துகொண்டு இருக்கின்றன. அதிலும் அதிமுகவைப் பார்த்து வெங்கையா நாயுடு “எங்களுக்கும் அதிமுகவிற்கும் கொள்கை வேறுபாடு கிடையாது” என்று சொல்லும் அளவில்தான் அதன் செயல்பாடு இருக்கின்றது. ஆனால் இது எல்லாம் சமஸுக்குப் போதாது, அவர் இன்னும் பெரிதாக எதிர்பார்க்கின்றார். தமிழகத்தில் பார்ப்பனர்களைத் தவிர பல இடைநிலை சாதிகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் அவர்களின் பிரதிநிதித்துவப்படிதான் அரசியல் கட்சிகளில் உள்ளார்களா என்றெல்லாம் சமஸ் ஆராய முற்படவில்லை. நேராக பார்ப்பனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டுதான் அவர் கொதித்தெழுகின்றார்.

சமஸ் எவ்வளவு மட்டமான பார்ப்பன அடிவருடி என்பதற்கு அவரின் கீழ்க்கண்ட வரிகளே சான்றாகும். “தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் கூடியது பிராமணச் சமூகம். இன்றைக்கெல்லாம் 2.5%க்கும் குறைவான எண்ணிக்கையிலுள்ள அவர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை அளித்து அரசியல் ரீதியாக அவர்களை உள்ளிழுப்பது நல்லெண்ணங்களை விதைப்பதாக மட்டுமல்லாது, தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான அரசியல் பிரதிநிதிகளாகவும் திராவிடக் கட்சிகளைப் பகிரங்கப்படுத்தும் செயல்பாடாகவும் அமையும்”. இதற்கு மேல் பிழைப்பை ஓட்டுவதற்காக பார்ப்பனனை நக்கி எவனாலும் எழுத முடியாது.

 திராவிட இயக்கத்துக்குள் பார்ப்பனனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனக்குமுறலுடன், திராவிடத்திற்குப் பதில் தமிழை முன்மொழிகின்றார். சமஸுக்கு ஏதோ தமிழ் மீது உள்ள பற்றினால் அப்படி கூறுகின்றார் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். பார்ப்பனனை திராவிட இயக்கத்திற்குள் நுழைப்பதற்குத் தடையாக இருப்பதே திராவிடம் என்ற கருத்தியல்தான். தமிழர் என்று சொல்லும்போது அதில் பார்ப்பன உச்சிக் குடுமிகளுக்கும் இடம் கிடைக்கும். ஆனால் திராவிடன் என்று சொன்னால் ஆரிய பார்ப்பனனை அது ஒதுக்கிவிடும். எனவே முதலில் திராவிடத்திற்கு மாற்றாக தமிழையும், அடுத்து அப்படி மாற்றப்பட்டபின் அதில் விகிச்சாரப்படி பிரதிநிதித்துவத்தையும் கேட்கின்றார். எங்கே இத்தோடு கட்டுரையை நிறுத்திக்கொண்டால் நம்மை ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கைக்கூலி என்று சொல்லிவிடுவார்களோ என்று, போனால் போகட்டும் என்று தலித்துகளையும், முஸ்லிம்களையும் சும்மானாட்சிக்குச் சேர்த்துக் கொள்கின்றார்.

 தமிழ் இந்து ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் கருத்தியல் தளத்தில் தமிழ் மக்களிடம் பார்ப்பனியத்தை மறைமுகமாக, ஆனால் வீச்சாகப் பரப்பும் ஈனச்செயலை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கின்றது. பத்திரிக்கைகளை பார்ப்பனர்கள் கைப்பற்றி வைத்திருப்பதே இது போன்ற தனக்குத் தோதான கருத்துக்களைப் பரப்புவதற்குத்தான். வரலாற்று அறிவே இல்லாத சில சங்கிமங்கி வரலாற்று ஆசிரியர்களை வைத்து தொடர்ச்சியாக வரலாற்றுப் புரட்டுகளைப் பரப்புவது, சமஸ் போன்ற கருப்புப் பார்ப்பனர்களைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கூட்டத்திற்குத் தேவையான கருத்துக்களை உற்பத்தி செய்து தருவது போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் வெளிவரும் தினமலர், தினமணி போன்ற குப்பைத்தொட்டி பத்திரிக்கைகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தனது பார்ப்பன சேவையைச் செவ்வனே செய்கின்றது. இது போன்ற கட்டுரைகள் பத்திரிக்கையில் வெளியிடுவதற்கு மாறாக பேருந்து நிலையக் கழிவறைகளில் எழுதி வெளியிடலாம். இன்னும் பரவலாக சென்றுசேரும்.

எனவே அடுத்த நூற்றாண்டுக்கான தமிழ் தி இந்து எப்படி இருக்க வேண்டும் என்றால், இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவின் ரத்தம் தோய்ந்த கரங்களால் ‘லங்கா ரத்னா’ விருது பெற்ற என்.ராம் போன்ற தமிழின விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட, மோடியைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தர மறுத்ததற்காக பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜனை வெளியேற்றிய பார்ப்பன பாசிசம் அற்ற, சமஸ் போன்ற பார்ப்பனனை நக்கிப் பிழைப்பு நடத்தும் சுயமரியாதை உணர்வற்ற ஜென்மங்கள் இல்லாத, குறிப்பாக இந்து என்ற பெயர் நீக்கப்பட்ட பத்திரிக்கையாக அது இருக்க வேண்டும். ஆனால் உயிர் போன பின்னால் பிணத்தைப் புதைப்பது தவிர வேறு வழியில்லையே!

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 V.PANDY 2017-04-10 17:49
GOOD ONE..
Report to administrator
+1 #2 srihari 2017-04-10 19:06
Its true. Thanks
Report to administrator
+2 #3 Vanchinathan 2017-04-12 15:07
பார்ப்பனீயத்தின ் வெற்றி எதன்மூலம் நிலைநாட்டப்பட்ட ுள்ளது என்ற தங்களது கருத்தாற்றல், கோபம், அனல் தெரிக்கும் வார்த்தைகள், ஆதிக்கத்தெதிரான ஆதங்கம், சமஸ்'ன் டங்குவாரை அறுத்தது உட்பட இது ஒரு எழுத்தாளனின் கருத்து கட்டுரை என்பதைத் தாண்டி ஒரு முற்போக்காளனின் உள்ள குமுறல் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
Report to administrator
+2 #4 PortoNovoKajaNazimudeen 2017-04-12 17:53
There you are! Fantastic article!
Report to administrator

Add comment


Security code
Refresh