Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் அவர்கள் தனக்கு இஸ்லாமியர் என்ற காரணத்தினாலேயே சென்னையில் வீடு மறுக்கப்படுவதாக ‘தமிழ் இந்து’ நாளிதழிலில் கட்டுரை எழுதியிருந்தார். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இஸ்லாமியர்களுக்கு வீடுகள் மறுக்கப்படுவது, தமிழகத்தில் நீண்ட காலமாகவே இருந்து வரும் பிரச்சினைதான். பலபேர் ‘தான் இஸ்லாமியன்’ என்ற காரணத்தினாலேயே வீடு மறுக்கப்படுவதைத் தொடர்ந்து பொதுவெளியில் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டதற்கும், அதை இன்னும் தீர்க்கத் துப்பற்று, அதற்கான அரசியல் உரையாடல்கள் பெரிய அளவில் பொதுவெளியில் நடைபெறாமல் போனதற்கும், நாம் யாரைக் குற்றம் சாட்ட வேண்டும் என்ற தெளிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்லாமியன் என்றால் தீவிரவாதி என்ற பிம்பத்தைத் தமிழகத்தில் ஆழமாக வேறூன்றச் செய்தது இங்கிருக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்றவர்கள்தான். அவர்களின் அடியாட்கள் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக திரைப்படத் துறையில் ஊடுறுவி அதைப் பெரிய அளவில் செய்து முடித்தார்கள்.

 manushyaputhiranதமிழகத்தில் முஸ்லிம்களின் பிம்பத்தைத் தொடர்ந்து மோசமாகக் கட்டமைத்து, அதை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்ற கீழ்த்தரமான பெருமை தமிழ்த் திரை உலகையே சாரும். தினமணி, தினமலர் போன்ற பார்ப்பன நாளிதழ்களும் துக்ளக், குமுதம், விகடன் குழுமம் போன்ற பார்ப்பன வார இதழ்களும் படித்த மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களிடம் இந்தப் பணியைச் செய்தது என்றால், தமிழ்த் திரைப்பட இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அதைச் சாதாரண படிக்காத பாமர மக்கள் வரை கொண்டு சேர்த்தனர். தங்களுடைய படங்களில் கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரமாக இஸ்லாமிய தீவிரவாதிகள் வருமாறு பார்த்துக் கொண்டனர். இதனால் பொதுச் சமூகத்தில் தீவிரவாதி என்றாலே அது முஸ்லிம்கள் தான் என்ற ஒரு பொதுபிம்பம் மிகத் திறமையாக கட்டமைக்கப்பட்டது. அது தொடர்ந்து அழிந்துவிடாமல் பராமரிக்கப்பட்டும் வருகின்றது. அப்படியான ஒரு நிகழ்வு இங்கு தொடந்து நடந்து கொண்டிருந்தபோது, அதற்கு எதிராக எழுதியவர்களையும், பேசியவர்களையும் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக, தமிழ் மக்களின் நலனுக்காக உண்மையாக உழைப்பவர்கள் நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் எந்த அரசியல் கட்சியும், இப்படியான முஸ்லிம்களுக்கு எதிராக எதிர்நிலையில் கட்டமைக்கப்படும் பிம்பத்தைப் பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

 ரம்ஜான் நோன்புகளில் குல்லா போட்டுக்கொண்டு நோன்புக் கஞ்சி குடித்த எந்த அரசியல் கட்சித் தலைமைகளும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டுமே தேவைப்பட்டன. பண்பாட்டுத் தளத்தில் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய எதிர்ப்புணர்வை எப்படி தீர்த்து வைப்பது என்ற எந்தத் திட்டமும் அவர்களிடம் இல்லை. மாறாக அவர்கள் பிஜேபியுடன் மாறி, மாறி கூட்டணி வைத்து, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பீயைக்கூட தின்கத் தயங்காத கழிசடைகள் என்பதை நிரூபித்தார்கள். இங்கிருந்த தேர்தல் பாதையில் பங்கெடுக்கும் இஸ்லாமிய அமைப்புகளும் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல், அதே கட்சிகளுடன் தங்களைப் பிணைத்துக்கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அதே நரகலை நோக்கிச் சென்றார்கள்.

 இஸ்லாமியர்களுக்கு வீடுகள் மட்டும் அல்ல தமிழகத்தில் நிறைய தொழிற்நிறுவனங்களில் வேலை கூட மறுக்கப்படுகின்றது என்பது தான் உண்மை. அதற்கு எதிராக இங்கிருக்கும் பெரியாரிய, மார்க்சிய அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றன. ஆனால் அவர்களை இங்கிருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் எப்போதும் கவனமாக தவிர்த்தே வந்திருக்கின்றன. தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகள் எவ்வளவு துரோகங்களை இஸ்லாமிய மக்களுக்கு செய்திருந்தாலும், அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், அவர்களிடம் இஸ்லாமிய மக்களை அடமானம் வைக்கும் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய மக்களுக்காக உண்மையாகப் போராடும் முற்போக்கு அமைப்புகளை ஒரு பொருட்டாகக் கூட எப்போதும் எடுத்துக் கொண்டதில்லை. அப்படியே முற்போக்கு அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தாலும், அது அவர்களின் பிழைப்புவாதத்தையும், சுயநலத்தையும் கேள்விக்குட்படுத்தாத வரையிலும் தான் தொடரும். இந்து பயங்கரவாதத்தைப் பற்றி பேசும்போது கைதட்டி ஆதரவு தரும் அவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றி பேசும்போது மட்டும் முகம் சுழித்து ஒதுங்கிக் கொள்கின்றார்கள்.

 மனுஷ்ய புத்திரன் அவர்களின் ஆதங்கம் உண்மையில் வருத்தமளிக்கின்றது. தமிழ் இலக்கியத்திற்கு அவரின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஊடகங்களில் காவி பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், சாதியவாதிகளுக்கு எதிராகவும் மிகத் திறமையாக பேசக் கூடியவர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவரின் இத்தனை புகழும் கேவலம் ஒரு வீடு கிடைக்கக் கூட பயன்படவில்லை என்பதை அவர் எப்படி பார்க்கின்றார்? அதற்கு அவரின் தீர்வு என்ன? என்பதுதான் நமது கேள்வி. அவரே குறிப்பிட்டது போன்று “ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்த போதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது... வெளியே போ!” இப்படிப்பட்ட நிலையில், இஸ்லாமிய மக்கள் எந்த வகையான அரசியலை கையில் எடுக்க வேண்டும் என்று மனுஷ்ய புத்திரன் நினைக்கின்றார்? மிகப் பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தும், அவருக்கு வீடு கிடைக்கவில்லை, அவருக்கான சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், அவர் தேர்ந்தெடுத்த அரசியல் பாதை எந்தளவிற்கு சரியானது என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். அவருக்கு மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அவர் என்ன தீர்வை முன்வைக்கின்றார் என்பதையும் சேர்த்துதான் நாம் இதைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

 இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் மத்தியில் வீடு மறுக்கப்படுவதின் பின் உள்ள அரசியலை அம்பலப்படுத்துவதும், அவர்களின் மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் பற்றிய பயத்தை அகற்றுவதும், மேற்கொண்டு அப்படியான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்படாமல் பாதுகாப்பதும் எப்படி என்பதில் தான் பிரச்சினைக்கான தீர்வு உள்ளது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தே இஸ்லாமிய மக்களுக்கான பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று இங்கிருக்கும் பிழைப்புவாத இஸ்லாமிய இயக்கங்கள் நினைக்கின்றன. அவர்களுக்கு அது வசதியாகவும் இருக்கின்றது. தாங்கள் அடிப்படையாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தங்களுடைய மத அடிப்படைவாதத்திற்கு எந்தப் பங்கமும் வராத, தங்களுடைய பிற்போக்குத்தனத்தைக் கேள்விக்குட்படுத்தாத கட்சிகள் அவர்களுக்கு மிகவும் தோதான கூட்டணியாக உள்ளது. இறுதியில் ஏமாந்து போவது சாமானிய இஸ்லாமிய மக்கள் தான். அவர்கள் வீடு கிடைக்காமல் அலைந்தால் என்ன, வேலை கிடைக்காமல் அலைந்தால் என்ன, இல்லை எக்கேடு கெட்டு நாசமாய் போனால் நமக்கென்ன, நமக்கு ஒன்றோ, இரண்டோ சீட்டு கிடைக்கின்றதா... அதுவே போதும் என்பதுதான் இஸ்லாமிய மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளின் இறுதியான முடிவாக உள்ளது.

ஆனால் நாம் முன்வைக்கும் தீர்வு என்பது அதற்கு வெளியேயானது. பெரியாரிய இயக்கங்களிலும், மார்க்சிய இயக்கங்களிலும் இஸ்லாமிய மக்கள் தங்களை இணைத்துக்கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும். மதத்தை முன்வைத்து இத்தனை ஆண்டுகாலமாக உங்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளைவிட, 'மதமில்லை, கடவுள் இல்லை, சாதி இல்லை, அனைவரும் சகோதரர்கள்' என்று சொல்லும் முற்போக்குவாதிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. வீடு மறுக்கப்படுவதற்கும், வேலை மறுக்கப்படுவதற்கும் மதம் ஒரு காரணம் என்றால், அந்த மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியானதா, இல்லை அதற்கு எதிரான அரசியலை முன்னெடுப்பது சரியானதா என்பதை இஸ்லாமிய மக்கள் நேர்மையாக சிந்திக்க வேண்டிய தருணமிது.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Manikandan 2017-03-31 15:00
கார்கி போன்றவர்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதம் என்பது the so called முற்போக்கு கூட்டத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்தால் மட்டுமே அது இஸ்லாமிய தீவிரவாதம் என்பார்கள். ஆனால் சாதாரண மக்களுக்கு அப்படி அல்ல அதுவும் இன்றைய இன்டர்நெட் காலத்தில் உலகில் எங்கே எது நடந்தாலும் அடுத்த நொடியே அனைவருக்கும் தெரிந்துவிடும்.

தமிழ் சினிமாவும் பத்திரிகைகளும் தான் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டும் என்பது இல்லை, இஸ்லாமியர்களின் செயல்பாடுகளே அவர்களை பற்றிய பிம்பத்தை உருவாக்குகின்றன , மதத்தின் அடிப்படையில் நான் பாகிஸ்தானை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக இஸ்லாமியர்கள் பேசும் போது அவர்கள் மீதான நம்பக தன்மை குறைகிறது. ஜல்லிக்கட்டிற்க ு ஆதரவாக மெரினாவில் ஒசாமா பின் லாடன் படத்தை வைத்து போராட்டம் நடத்திய போது இஸ்லாமியர்கள் மீதான சதேகம் மேலும் வலு பெறுகிறது...

உண்மை இருக்கிறதோ இல்லையோ கார்க்கி போன்றவர்கள் திட்டமிட்டு RSS பிஜேபி மீது பொய்களை பரப்பி ஹிந்து தீவிரவாதம் என்ற பிம்பத்தை உருவாக்கும் போது, ஏன் உண்மையின் அடிப்படையில் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி சாதாரண மக்கள் பயப்பட கூடாது, இந்த நிலையை உருவாக்கியவர்கள ் இஸ்லாமியர்களும் , அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் முற்போக்கு அமைப்புகள் என்று சொல்லி கொள்ளும் கம்யூனிஸ்ட்களும ் தான் காரணம்.

உண்மையை எதிர்கொள்ளும் நேர்மை கார்கியிடம் இல்லை.
Report to administrator
0 #2 Manikandan 2017-03-31 15:14
இன்று பிஜேபி இந்தளவுக்கு வளர்ச்சி அடைந்து நிற்கிறது என்றால் அதற்கு இந்த முற்போக்கு அமைப்புகள் தான் காரணம், ஹிந்து மதத்தை பற்றி தவறாக பேசுவது, கொச்சைப்படுத்து வதை பெருமையாக நினைப்பது, இந்தியா ஒருமைப்பாட்டை குலைக்கும் செயல்களில் இறங்குவது என்று ஆரம்பித்து பல விஷயங்களை இந்த முற்போக்கு கம்யூனிஸ்ட் அமைப்புகள் செய்கிறார்கள், இதற்கு அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை யும் கூட்டாளிகளாக வைத்துக்கொள்கிறார்கள்.

பிஜேபி நாட்டின் ஒருமைப்பாட்டை பற்றி பேசுகிறது, ஹிந்து மதத்தை காக்க வேண்டும் என்று பேசுகிறது, நாட்டின் வளர்ச்சியை பற்றி பேசுகிறது பிஜேபியின் செயல்பாட்டிற்கு எதிர் நிலையில் கம்யூனிஸ்ட்கள் நிற்கிறார்கள், அதனால் இயல்பாக்க சாதாரண மக்கள் இந்த முற்போக்கு அமைப்புகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள ்... ஹிந்து மதத்தை அழிப்பதே எங்கள் நோக்கம் என்று சொல்லும் போது இயல்பாகவே ஹிந்துக்களை ஓரணியில் கொண்டு நிறுத்துகிறார்க ள் அது பிஜேபிக்கு ஆதரவாக மாறுகிறது.

ஒரு பக்கம் மாவோகள் சீனாவோடு சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிரான செயல்களை செய்கிறார்கள் இன்னொரு பக்கம் இஸ்லாமியர்களோடு சேர்ந்து கொண்டு காஷ்மீர் பிரிவினையில் ஆரம்பித்து இந்தியா பாராளுமன்றத்தை தாக்கியவர்களை ஆதரித்து செயல்படுகிறார்க ள், நிச்சயம் இந்த so called முற்போக்கு சக்திகள் என்பது இந்தியாவின் எதிரிகள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
Report to administrator
0 #3 A MAHARAJAN 2017-03-31 17:56
மனுஷ்யபுத்திரன் மாதிரியான முக்கிய அரசியல் கட்சியின் பின்னணி கொண்டவர், எந்த மதத்தவராயினும் ஒரு சாமானியர் வீடு கொடுக்கத் தயங்கவே செய்வார். இதற்கு ஏன் அவர் மத சாயம் பூசி தன்னுடைய ஊடகப் பிரபலத்தைப் பயன் படுத்தி வீதிக்கு விவாதப் பொருளைக் கொண்டு வந்தார்..?
ஒரு வேலை தன்னை விட வலிமைமிக்க ஒரு அரசியல் சமூகப் பின்னணி கொண்ட ஒருவரிடம் வீடு கேட்டிருந்தால் கொடுத்திருப்பார ்கள்..
Report to administrator
0 #4 Ramu 2017-03-31 18:12
mr.Manikandan பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்றவர்கள் இந்து மதத்தை காப்பது இருக்கட்டும். மனிதனை எப்போது காக்கப்போகிறார் கள். பிறப்புறுப்பை அறுத்து குழந்தையை கொள்வது என பல கேவலமான வேலைகளை செய்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன? வழக்கம் போல அவர்கள் செய்யவில்லையா என சொல்லப்போகிறீர் களா? இல்லை யாரோ செய்வதற்கு மொத்தமாக குறை கூறலாமா என சொல்லப்போகிறீர் களா?.
Report to administrator
-2 #5 Manikandan 2017-03-31 20:44
ராமு உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கார்கி போன்றவர்கள் ஹிந்து மத கடவுள்களை எந்தளவுக்கு அவமதிப்பாகவும் கேவலமாகவும் பேசுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும், அப்படி இருந்தும் கார்க்கி போன்றவர்களை கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதிகள் என்று ஹிந்து மதம் ஏற்கிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத பாரூக் நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் அதனால் ஹிந்து மதத்தை பற்றி நீங்கள் சொல்லும் விஷயங்களை ஏற்க முடியாத ஒன்று...

நீங்கள் குஜராத் கலவரத்தை அடிப்படையாக வைத்து இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது என்று சொன்னால் அதையும் முழுமையாக ஏற்க முடியவில்லை காரணம் குஜராத் கலவரம் பற்றி பேசும் போது அதை தூண்டி கோத்ர ரயில் எரிப்பை பற்றி உங்களை போன்ற ஆட்கள் பேசுவது இல்லை.

இந்தியா வரலாற்றில் நடந்த கலவரங்களை பார்த்தல் அது பெரும்பாலும் இஸ்லாமியர்களால் தூண்டப்பட்டதாகவ ே இருக்கும், இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது முதலில் கலவரத்தை தூண்டியவர் இஸ்லாமியர்களே (இது பற்றி பாக்கிஸ்தான் Dawn பத்திரிகையில் ஒரு கட்டுரை ஆதாரபூர்வமாக வந்து இருக்கிறது)

என்னை கேட்டால் நடந்த விஷயங்களை வைத்து வெறுப்பை தூண்டி கொண்டே இருப்பதை விட நடந்ததை மறந்து விட்டு மத ஒற்றுமையை வளர்ப்பது மேல் என்று நினைக்கிறேன்.
Report to administrator
+1 #6 Ramu 2017-03-31 22:40
mr.Manikandan, முஸ்லீம் மத வெறியை பற்றி கார்க்கி சிலநாட்களுக்கு முன் கூட கட்டுரை போட்டிருக்கார் பாருங்க.
வெறிபிடித்தவர்கள் எந்த மதமாயிருந்தா என்ன அத விட்டு வெளியேவந்து யோசிங்க.. கொஞ்சம் வளரலாம். அத விட்டுட்டு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி ஆதரவு தெரிவிக்காதிங்க .. சமீபத்துல நடந்த நந்தினி கொலை உங்க தங்கச்சியா இருந்தா இப்படித்தான் பேசுவீங்களா.மதம ்லாம் அழியாது. எங்கயும் ஓடியும் போகாது. கொஞ்சம் மனிதனா யோசிங்க.
Report to administrator
-2 #7 Manikandan 2017-04-01 10:15
Ramu: இந்த மாதிரி சம்பந்தம் இல்லாத ஒரு விஷயத்தை வைத்து ஒரு அமைப்பின் மீது வெறுப்பை தூண்டுவதை நான் எதிர்க்கிறேன். நந்தினி மரணத்திற்கும் RSS ஹிந்து முன்னணி போன்ற அமைப்புகளுக்கும ் என்ன சம்பந்தம் ? நந்தினி மற்றும் மணிகண்டன் என்று இரு தனிநபர்களின் தவறான உறவால் ஏற்பட்ட பிரச்சனையில் ஏற்பட்ட மரணத்தை நீங்கள் எல்லாம் என்னமோ RSS திட்டமிட்டு கொலை செய்தது என்பது போல் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த மாதிரியான விஷயங்களால் தான் உங்களை போன்ற ஆட்களின் மீது நம்பக தன்மை குறைகிறது.

குஜராத் கலவரத்தை பற்றி வாய் கிழிய பேசிய கொண்டு இருக்கும் இந்த (கார்க்கி உட்பட)முற்போக்க ுவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர ்களில் எத்தனை பேர் காஷ்மீர் பண்டிட்டுகளை இஸ்லாமியர்கள் இன அழிப்பு வாய் திறந்தார்கள் ? ஒருவரும் இல்லை... இது தான் உங்களை போன்ற ஆட்களின் லட்சணம்... மதசார்பின்மை என்பதின் உண்மை அர்த்தத்தை திரித்து இஸ்லாமிய கிறிஸ்துவ அடிப்படைவாத (தீவிரவாத) ஆதரவு தான் மதசார்பின்மை என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். .. அதில் உங்களை போன்ற ஆட்களை இஸ்லாமிய அடிப்படைவாதம் கொன்றதால் தான் உங்களுக்கு கோபம் வந்ததே தவிர இஸ்லாமிய அடிப்படைவாதம் தலித்துகளை கொன்ற போதும் சரி காஷ்மீர் பண்டிட்டுகளை இன அழிப்பு செய்த போதும் சரி இந்த முற்போக்குவாதிக ள் வாய் மூடி மௌனமாக தான் இருந்தார்கள்.

முற்போக்கு என்று சொல்லிக்கொண்டு இவர்கள் செய்வதும் மதவாத (இஸ்லாமிய கிறிஸ்துவ) மற்றும் ஜாதி(தலித் ஆதரவு ப்ராமண எதிர்ப்பு) அரசியல் தான். இவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது.
Report to administrator
+3 #8 செ.நடேசன் 2017-04-01 17:00
மனுஷ்யபுத்திரன் ‘தி இந்து’ தமிழ் நாளேட்டில் எழுதியிருந்த கட்டுரையின் எதிர்வினையாக செ.கார்கி முன்வைத்துள்ள கருத்துககள் நேர்மையுடன் எதிர்கொள்ளப்படவ ேண்டும்.ஆனால் நாம் முன்வைக்கும் தீர்வு என்பது அதற்கு வெளியேயானது. பெரியாரிய இயக்கங்களிலும், மார்க்சிய இயக்கங்களிலும் இஸ்லாமிய மக்கள் தங்களை இணைத்துக்கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும். மதத்தை முன்வைத்து இத்தனை ஆண்டுகாலமாக உங்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளைவிட, 'மதமில்லை, கடவுள் இல்லை, சாதி இல்லை, அனைவரும் சகோதரர்கள்' என்று சொல்லும் முற்போக்குவாதிக ள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. வீடு மறுக்கப்படுவதற் கும், வேலை மறுக்கப்படுவதற் கும் மதம் ஒரு காரணம் என்றால், அந்த மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியானதா, இல்லை அதற்கு எதிரான அரசியலை முன்னெடுப்பது சரியானதா என்பதை இஸ்லாமிய மக்கள் நேர்மையாக சிந்திக்க வேண்டிய தருணமிதுஎன செ.கார்கி கூறுவதைமுஸ்லீம் சகோதரர்கள் ஆழமான பரிசீலனைக்குள்ள ாக்கவேண்டும் - செ. நடேசன்
Report to administrator
0 #9 முஹம்மத் அலி ஜின்னா 2017-04-05 18:37
பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம்:

முதலில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள். திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க. "காபிர் மீது ஜிஹாத் செய்" என திருக்குரான் தெள்ளத்தெளிவாக சொல்கிறது.

உலகிலேயே பெரிய செக்யூலர்வாதி பாப்பான் அபுஜஹல்தான். “நீங்கள் ஆறு மாதம் காபாவில் அல்லாஹ்வை வணங்கிக்கொள்ளுங ்கள், ஆறு மாதம் நாங்கள் எங்களுடைய 360 சிலைகளை வணங்கிக் கொள்கிறோம். உங்களை அரேபியாவின் அரசனாக்குகிறோம் . பொன்னும் பொருளும் உங்களுடைய காலடியில் வந்து கொட்டுகிறோம்” என காபிர்-முஸ்லிம் நல்லிணக்க சித்தாந்தத்தை பாப்பான் அபுஜஹல் பெருமானாரின் முன் வைத்தான். “ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்” என அறிவித்து, காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்து நொறுக்கி அரேபியாவிலிருந் து பார்ப்பனியத்தை வேரறுத்தார் பெருமானார்.

சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார், நடுத்தெருவில் போட்டு உடைத்தார். "ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்" எனும் கருத்தில் அம்பேத்கருக்கும ், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில் லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது.

பார்ப்பனியத்துக ்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தால ும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. "நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை" என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் "நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்" என்று சொன்னால் பாப்பானுக்கு கதிகலங்கிவிடும்.

ஆகையால்தான் தந்தை பெரியார் "ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு" என போதித்தார்.
Report to administrator
0 #10 முஹம்மத் அலி ஜின்னா 2017-04-06 10:42
இஸ்லாமிய வளர்ச்சிக்கு பாப்பான் எனும் எதிரி தேவை:

பாப்பான் எனும் எதிரி இல்லாதிருந்தால் , பாக்கிஸ்தான் எனும் தேசத்தை முஸ்லிம்கள் உருவாக்கியிருக் க முடியாது. பாப்பான் நம்மை வாழ விடமாட்டான், கொன்று விடுவான் எனும் பயம் இல்லாதிருந்தால் , அணுகுண்டை பாக்கிஸ்தான் கண்டுபிடித்திரு க்க மாட்டான். பாபரி பள்ளியை பாப்பான் இடிக்காமலிருந்த ிருந்தால், திருக்குரானை புரட்டிக்கூட பார்த்திருக்க மாட்டோம்.

இன்று இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குரானை மொழி பெயர்த்து விட்டோம். ப்ராஹ்மின் சகோதர சகோதரிகளிடம் ஹிந்து மதத்திலுள்ள அசிங்கங்களையும் பொய் புரட்டுக்களையும ் எடுத்து சொல்லி "சகோதரா, திருக்குரானை படித்துப்பார்.. . ஏதாவது சந்தேகமிருந்தால ் கேள்" என சொல்லி தைரியமாக இஸ்லாத்தை பரப்புகிறோம்.

ஓ பார்ப்பனா !! அறியாமையில் உறங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்களை உசுப்பி திருக்குரானை படிக்க வைத்தாயே....

திருக்குரானை குருட்டாம் போக்கில் மனப்பாடம் செய்து ஜனகனமன போல் முனுமுனுத்துக் கொண்டிருந்த இஸ்லாமியருக்கு, அது பார்ப்பனீயத்தை வேரறுக்க வந்த சூப்பர்பவர் எனும் ரகசியத்தை புரிய வைத்தாயே..

எங்களுடைய அறிவுக் கண்களை திறந்தாயே…

இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக் க வழி திறந்தாயே...

உன்னை விட சிறந்த நன்பன் எங்களுக்கு வேறு யார்?.
Report to administrator
0 #11 முஹம்மத் அலி ஜின்னா 2017-04-06 10:53
தந்தை பெரியாரின் சமூக நீதிக்கான போராட்டத்தின் அடிப்படை பார்ப்பனீய எதிர்ப்பு. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கீற்று தளத்தின் இடைவிடாத போராட்டத்தை பாராட்ட வார்த்தைகளில்லை . ஆனால் இந்து எனும் ஜாதி சாக்கடையிலிருந் து கொண்டு உங்களால் எந்த ஜென்மத்திலும் பார்ப்பனீயத்தை அடக்க முடியாது. உங்களால் சொல்ல முடியாத சில விஷ்யங்களை இஸ்லாமியரால் மட்டுமே சொல்ல முடியும். அதற்கான ஒரே வழி, எனது கருத்துக்களை தங்கு தடையில்லாமல் தைரியமாக அனுமதிப்பதே என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
Report to administrator

Add comment


Security code
Refresh