கோவையில் 12/07/2015 அன்று நடைபெற்ற கொங்கு மண்டல அரசியல் மாநாட்டில் பேசிய பெரிய பொய்யர் ராமதாசும், சின்ன பொய்யர் அன்புமணியும் தமிழ்நாட்டில் 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தப் போவதாக பீதியூட்டி உள்ளனர். விஜயகாந்தின் பேச்சைக்கூட ஒரு ‘என்டர்டைமென்ட்’ என்ற வகையிலே கேட்க முடிந்த நம்மால் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் பேச்சை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அவ்வளவு நாராசமாக இருந்தது.

 anbumani 268தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகளை ஒரு பிடி பிடித்துவிட்ட ராமதாசும், அன்புமணியும் ‘மாற்றம் முன்னேற்றம் இதுதான் எங்களின் அரசியல் முழக்கம்’ என்று பிரகடனப்படுத்தி உள்ளனர். ராமதாசு ஒரு டுபாக்கூர் என்பதும் அவரது மகன் அதைவிட பெரிய டுபாக்கூர் என்பதும் தமிழ்நாட்டைத் தாண்டி இந்திய அளவில் பிரபலமான உண்மைகள். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குத் தடயமே இல்லாமல் இரவோடு இரவாக ஒரு கள்வனைப்போல தாவும் திறமை நமது ராமதாசுக்கும், அன்புமணிக்கும் மட்டுமே உள்ளது.

 மாநாட்டில் பேசிய ராமதாஸ் “தமிழக அரசியலில் நியாயமான, ஊழலற்ற ஆட்சியை காமராஜர் மட்டுமே வழங்கினார், அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.120 மட்டுமே கடைசியாக இருந்தது. ஆனால் அவர் பெரிய அளவில் ஊழல் செய்ததாக திராவிடக் கட்சிகள் அவரையே குறை சொன்னார்கள்” என்றார். ஆனால் ராமதாஸ் தன்னுடைய வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் தற்போது இருப்பில் உள்ளது என்பதை சொல்லாமல் விட்டு விட்டார். இந்த மகா ஏழைகளுக்கு சொந்தமாக இந்தியா முழுவதும் பல ஆயிரக்கணக்கான கோடிகள்தான் சொத்து இருப்பதாக சொல்கின்றார்கள். தைலாபுரத் தோட்டம் கூட சில கோடிகள்தான் மதிப்பு உள்ளதாம். பாவம் இந்தியாவிலேயே ஏழை அரசியல்வாதிகள் இந்த ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் தான்!.

 அன்புமணிக்கு ஊழல் என்றால் என்னவென்றே தெரியாது! மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது உள்கட்டமைப்பே இல்லாத இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு பெட்டி வாங்கிக்கொண்டு அங்கீகாரம் வழங்கியதாக அவர்மீது சி.பி.ஜ விசாரணை நடந்துவருகின்றது. அதுமட்டும் அல்லாமல் நாட்டின் 90% தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றைத் தயாரிக்க தடை விதித்ததோடு தனது கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவரின் நிறுவனமான கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்துக்கு தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் உரிமையை வழங்கினார்.

 இப்படிப்பட்ட அன்புமணி கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் மேடையேறி அடுத்தவர்களின் ஊழல் பற்றி பேசுகின்றார். “அறிஞருக்கு, கலைஞருக்கு, நடிகைக்கு, நடிகருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், வரும் தேர்தலில் முதல்முறையாக ஒரு படித்த இளைஞனுக்கு, மருத்துவருக்கு இந்த அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று பிச்சை கேட்கின்றார்.

 ஒருவேளை அன்புமணியை தமிழ்நாட்டு மக்கள் தப்பித்தவறி (மலத்தை சாப்பிடச் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு கனத்த மனதோடு)                  ஒட்டுப்போட்டு முதலமைச்சராக ஆக்கினார்கள் என்றால் அவர் என்ன செய்வார்? அவரது ஆட்சி எப்படி இருக்கும்?

 1) தமிழ் நாட்டில் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் போன்றவை தலித்துகள் அணிய நிரந்தர தடை விதிக்கப்படும்.

2) அதைக் கண்கானிக்க ஒவ்வொரு ஊரிலும் கவுண்டர், வேளாளர்கள், தேவர், பிள்ளைமார், நாயக்கர்கள், முதலியார்கள், செட்டியார்கள் போன்றோரை கொண்ட சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

3) இவர்களுக்கு இராணுவ சிறப்பு அதிகாரச்சட்டம் போன்று வலிமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்படும். தலித் இளைஞர்கள் யாராவது ஜீன்ஸ் பேண்டும், கூலிங்கிளாசும் போட்டால் அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவார்கள்.

 4) காதலித்து சாதி மாற்றி சாதி சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால், அது காதல் நாடக திருமணம் அல்ல பெற்றோரின் அனுமதியுடன் நடக்கும் நல்ல காதல் திருமணம் என்று இந்த அனைத்து சமுதாய தலைவர்களிடம் சர்டிபிகேட் வாங்கவேண்டும். இல்லை என்றால் நீங்கள் ஊர் மத்தியில் கட்டி வைத்து எரிக்கப்படுவீர்கள்.

5) வட மாநிலங்களில் உள்ள கப் பஞ்சாயத்துகள் போன்ற அமைப்புகள் தமிழ்நாட்டின் ஊர்கள் தோறும் ஏற்படுத்தப்படும். இதுவும் அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு போன்று சர்வ வல்லமை படைத்த அமைப்பாக இருக்கும்.

6) தலித்துகள் தங்களது வீடுகளை தாங்களாவே எரித்துவிட்டு நஷ்ட ஈடு கேட்கும் ஃபேஷன்கள் தடுக்கப்படும்.

7) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி உள்ளிட்ட அனைத்து அரசு பதவிகளிலும் வன்னியர்கள் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணி அமர்த்தப்படுவார்கள்.

8) தமிழ் நாட்டை சாதி வாரி மாநிலமாக பிரிக்க முயற்சி எடுக்கப்படும். அதாவது வன்னியர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களை தனியாகப் பிரித்து வன்னிய நாடும், கவுண்டர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடும், தேவர்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களைப் பிரித்து கள்ள நாடும் உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.

9) பாடத்திட்டங்கள் திருத்தப்படும். தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம் போன்றவை வீர வன்னியர்களின் சத்திரியப் போராக சித்தரிக்கப்படும்.

10) திராவிட கட்சிகளின் சித்தாந்தங்கள் தடை செய்யப்படும்.

 இது போன்ற இன்னும் பல நல்ல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். எனவே தமிழ்நாட்டு மக்கள் அன்புமணியை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்திலே வெற்றி பெறச்செய்யுமாறு சாதிவெறியர்களின் சார்பாகவும், ஊழல்பேர்வழிகளின் சார்பாகவும் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

- செ.கார்கி

Comments

11 comments

11
manjunath
Sure.anbumani ramadasin arasial naadagam..
G.Ravichandran
Instead of criticising categorically the ideals of PMK, the writer has vomitted his cheap and mean views. anbumani ramadossai patriya migavum malivana vimarsanam
cheran
anbumaniramadas is only vanniyar ,there are no vanniyar inthe other partyes or thiravidarkashagam or even naxlait party. you want to open the house of all comminity people to thalith boyes to ........... this is you want. socity defnetly will react.
Logash
கேவலமான கட்டுரை , திருமாவளவன் பண்ணுவது சாதி அரசியல் இல்லை என்று நீ சொன்னால் , இவர்கள் செய்வதும் சாதி அரசியல் இல்லை . வெட்கமே இல்லாமல் திருமா ஒரு போராளியாகவும் இவர்கள் சாதி அரசியல் செய்வதாகவும் கூருவிர்கள் .
அவர்கள் சாதி அரசியல் செய்தாலும் மது ,மணல் கொல்லைக்கு எதிராக சவால் விட முடிகிறது .எந்த அரசியல் கட்சிக்கு இந்த தைரியம் உள்ளது .அவர்கள் தொலைக்காட்சி தமிழில் நடக்கிறது அதையும் கவனிக்க வேண்டும் .தலித்துகள் மட்டும் முன்னேற வேண்டும் மற்ற சமுதாயம் எதுவுமே முன்னேற கூடாதா .தலித்துகள் மட்டும்தான் துன்பபடுகிரர்கள் வன்னியர்கள் எல்லாம் பணத்தில் திளைகிரர்களா .
sivajirao
கீற்றின் கேவலமான கட்டுரை இது.இவர்கள் போன்ற கேவலமானவர்கள் மாற்றம் வரக்கூடாது என்று நினைப்பே .
Eswar
Oru arasiyal thalaivarai vimarsanam seiyalm ,,, antha ottumotha vanniyar samuthayathai vamarsikka unaku thaguthi kiddyathu .... Don't use such word of vanniyars k .... Do u know about total strength of vanniyars in tamilnadu .....once again tell you ..... Mind it
Mohan
காலாகாலமாக இருந்துவரும் ஜாதியக் கட்டமைப்பு என்பது சட்டென மாற்றிவிடக் கூடியதல்ல. சமுதாய அமைப்புகளின் மாற்றங்கள் எளிதில் நிகழ்ந்து விடுவதில்லை. சில பட்டியல் ஜாதி இளைஞர்கள் மத்தியில், தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தித் தங்கள் இனத்தவர்களை எல்லா வகையிலும் சமுதாய நீரோட்டத்தில் சமமானவர்களாக நிரூபிக்கும் ஆர்வத்தைவிட, ஆண்டாண்டு காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழி வாங்க வேண்டும் என்பதில்தான் முனைப்புக் காட்டுகிறார்கள். அது விரோதத்தை வளர்த்து வன்முறைக்கு வழிகோலுமே தவிர, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.
Mohan
அநாகரிகமான, கேவலமான கட்டுரை .முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
murali
very very worst statement Keetru is true Thalith website
கேவலமான கட்டுரை இது.இவர்கள் போன்ற கேவலமானவர்கள் மாற்றம் வரக்கூடாது என்று நினைப்பே .
பகுத்தறிவாளன்
நேஞ்சுரத்தோடு உண்மையினை உறுதியோடு வெளியிட்ட கீற்று படைப்பாளர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
Arun
கேவலமான கட்டுரை முழுமையாக நீக்கப்பட வேண்டும்.Thirumavalan than Tamilnattil jathi kalavarathai thoondukirar.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.