தோழர் பெ.மணியரசன் போன்றவர்கள் பெரியார் தமிழ் மொழியை அழிக்கத் திட்டமிட்டு செயல்பட்டார்; அதன் ஒரு பகுதியாக தமிழ் எழுத்துக்குப் பதிலாக ஆங்கில நெடுங்கணக்கு எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார் என்று தூற்றுகின்றனர், கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு மடல்கள் யார் தமிழை அழிக்க நினைத்தார்கள் என்பதை விளக்கும், இம் மடல்கள் பேராசிரியர் தி.வ.மெய்கண்டார் நடத்திவரும் இளந்தமிழன் இதழில் மறு வெளியீடு செய்யப்பட்டது,

தமிழில் எழுத்துக் குறை

- சி.சுப்பிரமணிய பாரதி

(சூலை 1915, ஞானபாநு)

ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி, பெங்காளி, மகாராஷ்ட்ரம், குஜாரத்தி, தெலுங்கு,  கன்னடம், மலையாளம் முதலிய மற்ற பாரத பாஷைகளிலெல்லாம் வர்க்க எழுத்துக்கள் உண்டு.

அதாவது, க,ச,ட,த,ப என்ற ஐந்து வல்லெழுத்துக்களில் ஒவ்வொன்றுக்கும் நான்கு வேறுபாடுகள் இருக்கின்றன. திருஷ்டாந்தரமாக,

வடசொல்       பொருள்

1)            பரம்            மேலானாது

2)            பலம் ( ப = ph)       பயன்

3)            பலம் ( ப = b)        வலிமை

4)            பாரம் ( ப = bh)       சுமை

வெவ்வேறு எழுத்துக்களை முதலாகக் கொண்ட இந்த நான்கு சொற்களையும் தமிழில் வழங்கி வருகிறோம். ஆனால், ‘எல்லசெட்டி வெக்க ஏக லெக்க’ என்பது போல எல்லாவற்றிலும் ஒரே ‘ப’ தான் போடுகிறோம்.

ஆனால், ஸம்ஸ்க்ருதச் சொற்களை ஸம்ஸ்க்ருத வழக்கப்படி நாம் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லை யாதலால், நமக்கு அந்த எழுத்துக்கள் வேண்டுவ தில்லையயன்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். சரி. நியாயமென்று வைத்துக் கொள்வோம்.

வெளிநாட்டு ஊர்களின் பெயர்களையும் மனிதர்களின் பெயர்களையும் நாம் சரியானபடி சொல்ல வேண்டுமா, அதுவும் வேண்டாமா? சுதேசமித்தரன் பத்திரிகையைச் சென்ற 15 வருங்களாகப் படித்து வரும் ஒரு அய்யங்கார் நமது நிதானக் கட்சித் தலைவராகிய ஸ்ரீ கோகளே (Gokhale) யின் பெயரைத் தப்பாக உச்சரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ‘தங்கம்’ என்ற சொல்லில் ‘க’ உச்சரிப்பது  போல அப்பெயரில் முதலெழுத்தாகிய ‘கோ’ வை மெலிதாகச் சொல்ல வேண்டும்.  பிராமணர் ‘கோபுரம்’ என்று சொல்லும்போது ‘கோ’ வை எப்படிச் சொல்லு கிறார்களோ அதுபோல ‘கோகளே’ யின் முதலெழுத்தையும் சொல்ல வேண்டும். இரண்டாவ தெழுத்தாகிய ‘க’ என்பதை ‘க்ஹ’ என்ற ஒலி இலேசாகத் தோன்றும்படி அழுத்தி உச்சரிக்க வேண்டும். மகம் என்று வைதிகப் பிராமணர் சொல்வது போலே, அய்யங்கார் இதை (Kokhale) என்று சொன்னார். அது மேல் குற்றமில்லை. சுதேசமித்திரன் மேலும் குற்றமில்லை, தமிழில் எழுத்துக் குறைகிறது.

பெல்லாரி, குத்தி, பனராஸ், பம்பாய் என்று நமது நாட்டு ஊர்ப் பெயர்களைக் கூட நாம் விபரீதமாக எழுதும்படி நேரிட்டிருக்கிறது! இதற்கென்ன விமோசனம்?

கல்கத்தாவிலிருக்கும்போது ஸ்ரீமான் அரவிந்த கோஷ் (இவர் பெயரையும் தமிழில் சரியாக எழுத இடமில்லை. ‘Gosh’ என்பதை ‘Kosh’ என்று எழுத நேரிடுகிறது! ).

ஸ்ரீமான் அரவிந்தர் தமிழ் கற்றுக் கொள்ள விரும்பினாராம். அங்கு தென்னாட்டு மனிதர் ஒருவர். இவருக்கு நமது அரிச்சுவடி முழுதும் கற்றுக் கொடுத்தார். முதல் பாடப் புஸ்தகமும் நடந்தது. அப்படியிருக்கும்போது ஒரு நாள் ஒரு பத்திகையாகப்பட்டது. அதில் ‘பீரேந்திர நாத த்த குப்தர் வழக்கு’ என்று மகுடமிட்டு ஒரு ‘வ்யாஸம்’ எழுதியிருந்தது. அதைப் பார்த்து விட்டு அரவிந்தர் தமது தமிழ் வாத்தியாரிடம் ‘இதென்ன?’ என்று கேட்டார். வாத்தியார் ‘Birendranath Datta Gupta’ என்று அச்சொல்லை பெங்காளி ரூபத்திலே சொன்னார். இங்கிலீஷ் தெரியாத கிராமத்துத் தமிழர் இச்சொல்லை எப்படி வாசிப்பார்கள்? என்று அரவிந்தர் கேட்டார். நீர் வாசித்தது போலவே (‘Pirendranath Tatta Kuptar’)(t->) என்றுதான் வாசிப்பார்கள் என்று வாத்தியார் சொன்னாராம். இன்னும் அரவிந்தர் இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லி சிரிக்கிறார்.

நமது பத்திரிகைகளில் ஐரோப்பாவிலுள்ள நகரங்கள், நதிகள், மலைகள் முதலியவற்றின் பெயர்களைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. அதைத் தமிழ் மாத்திரமறிந்த தமிழர் எப்படி வாசிப்பார்களென்பதை நினைக்கும் போது காது கூசுகிறது.

இங்கிலீஷ் அக்ஷரத்தில் பிரெஞ்ச், அரபி, பார்ஸி, ஸமஸ்க்ருதம் முதலிய பாஷைகளில் பதங்கள் சிலவற்றை எழுதுவதற்கு, ஸாதாரண இங்கிலிஷ் அரிச்சுவடி இடங்கொடாததைக் கருதிச் சில புதிய குறிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விசே­ உச்சரிப்புகளுக் கிணங்கும்படி சில தனிக்குறிகள் ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

நாமும் அப்படியே சில விசே­க் குறிகள் ஏற்பாடு செய்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

ஏற்கனவேதான் இந்தக் குறையை நீக்கும் பொருட்டாக மிகவும் சுலபமாக ஐந்து நிமி­ங்களில் யாரும் கற்றுக் கொள்ளக்கூடிய சில குறிகள் தயார் செய்து வைத்திருக்கிறேன். ஆனால், இப்புதிய வழியைத் தமிழ்நாட்டுப் பத்திராதிபர்களிடம் பிறரும் அறியும்படி துண்டுப் பத்திரிகைகள் போட்டு வேலை செய்வதற்கு வேண்டிய யஸளகர்யங்கள் எனக்கு இன்னும் சில மாதங்கள் கழிந்த பிறகுதான் ஏற்படும்.

இப்புதிய உபாயத்தை அனுசரிப்பதால் இப்போது நாமெல்லோரும் எழுதி வரும் முறைமைக்கு யாதொரு ஸங்கடமும் உண்டாகாது. புதிய குறிகள் தெரியாதவர்கள் கூட வழக்கம் போலவே படித்துக் கொண்டு போவார்கள். யாருக்கும் எவ்விதமான சிரமும் ஏற்படாது. நமது பாஷைக்கு நமது அரிச்சுவடி போதும். அந்யதேசப் பெயர்கள் முதலியவற்றிற்காக மாத்திரமே இப்புதிய முறை ஏற்பட்டது. எனது புதிய முறையை இப்போதே அறிந்து கொள்ள விரும்புவோர் கீழே கண்ட என் விலாஸத்துக்கு இரண்டனா தபால் முத்திரை வைத்தனுப்பினால் அவர்களுக்கு இம்முறை நல்ல கையயழுத்தில் தெளிவாக எழுதுவித்து அனுப்புகிறேன்.

சி.சுப்பிரமணிய பாரதி,

தர்மராஜா தெரு, புதுச்சேரி.

குறிப்பு: மற்றப் பத்திரிகைகளும் இதைப் பிரசுரிக்குமாறு வேண்டப்படுகின்றன. (சூலை 1915 ஞானபாநு)

தமிழ் எழுத்துக்கள்
(ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் எழுதியது)

சென்ற சில வரு­ங்களாகச் சில அறிவாளிகள் நம் தமிழ்ப் பாஷையில் சில எழுத்துக்கள் குறைவாயிருக்கின்றன யயன்றும், அக்குறைவை நிவிர்த்திக்கத்தக்க பிற பாஷை எழுத்துக்களேனும் பிற சில குறிகளேனும் தம் தமிழ்ப் பாஷை எழுத்துக்களோடு சேர்க்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகின்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவரும் அவை சேர்க்கப்படுதல் நம் தமிழ்ப் பாஷைக்காவது அதன் வளர்ச்சிக்காவது இன்றியமையாததென்று காட்டத்தக்க காரணம் ஒன்றையும் இது காறும் கூறிலர். இச்சேர்க்கை  நம் தமிழ்ப் பாஷைக்கு இன்றியமையாததென்று காட்டக் கருதி நமது நண்பர் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியவர்கள் சென்ற ஆடி மாதத்தில் வெளி வந்த நமது ‘ஞானபாநு’ வில் ‘தமிழில் எழுத்துக் குறை’ என்னும்  தலைப் பெயரோடு ஒரு நிரூபம் வரைந்துள்ளார்கள். அந்நிரூபத்தில் மேற்கண்ட சேர்க்கையைச் செய்ய வேண்டுமென்பதற்காகக் கூறப்பட்டுள்ள காரணம் ஒன்றே, அஃதாவது, பிற பாஷைகளில் மனிதப் பெயர், நகரப் பெயர் முதலியவற்றிற் சிலவற்றை அப்பாஷையாளர் உச்சரிக்கும் சப்தத்தில் நாம் உச்சரிக்குமாறு செய்யதக்க சில எழுத்துக்கள் நமது தமிழ்ப் பாஷையில் இல்லையயன்பதே. நமது நண்பரவர்கள் தமது நிரூபத்தின் ரு(5) வது பகுதியில், ஸமஸ்க்ருத வழக்கப்படி நாம் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லை யாதலால், நமக்கு அந்த எழுத்துக்கள் வேண்டுவதில்லையயன்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். சரி நியாயமென்று வைத்துக் கொள்வோம் என்று கூறுகின்றார்கள். அச்சிலர் பிற பாஷைகளில் நாம் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லையாதலால், நமக்கு அந்த எழுத்துக்கள் வேண்டுவ தில்லை யயன்று கூறுகின்றனர். இக்கூற்றையும் நமது நண்பர்கள், சரி, நியாயமென்று வைத்துக் கொள்வோம் என்று அங்கீகரிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். முந்திய ஆக்ஷேபமும் பிந்திய கூற்றும் வேறல்ல வாகலான். அவ்வாறு நமது நண்பரவர்கள் அங்கீகரிப்பார்களாயின் பிற சில குறிகளையேனும் பிற சில குறிகளையேனும் சேர்த்தல் இன்றியமையாத தென்பதைக் காட்டத் தக்க காரணம் ஒன்றும் நமது நண்பரவர்கள். நிரூபத்தில் கூறப்படவில்லை யயன்பது. அதனைப் பார்த்த மாத்திரத்தில் விளங்கும் நண்பரவர்களாவாவது அவர்களைப் போன்ற வேறு பாஷா திருத்தக்காரர் களாலாவது கூறப்படுமாயின் அப்போது நமது தமிழ்ப் பாஷை திருத்தக்காரர்களாலவது கூறப்படுமாயின், அப்போது நமது தமிழ்ப் பாஷை எழுத்துக்களோடு பிற சில பாஷை  எழுத்துக்களைச் சேர்ப்பதா என்னும் வி­யத்தைப் பற்றிச் சிந்திக்கவும் தீர்மானிக்கும் நாம் முன் வரக் கடமைப்பட்டுள்ளோம். நிற்க.

சுதேசமித்திரனைச் சென்ற 15 வரு­ங்களாகப் படித்து வருகிற ஓர் அய்யங்கார் நமது நிதானக் கட்சித் தலைவருடைய (Gokhale) என்ற பெயரை கோக்களே என்று உச்சரித்தது. நமது நண்பரவர்களுக்குத் தப்பாக தோன்றியதும், நமது ஸ்ரீ அரவிந்தரவர்களின் தமிழ் உபாத்தியாயர் ஒரு வங்காளியின் ‘Birendranath Datta Gupta’ என்ற பெயரைத் தமிழர் ‘பிரேந்திரநாத் தத்த குப்தர்’ என்றுதான்  வாசிப்பரென்று கூறியது நமது அரவிந்தரவர்களுக்குச் சிரிப்பை உண்டு பண்ணியதும் நமது சமஸ்கிருத பண்டிதர்களும் வங்காளிப் பண்டிதர்களும் ‘பழனி’, ‘கிழவி’ என்னும் தமிழ்ச் சொற்களை ‘பளனி’, ‘கிளவி’ எனவும், ‘அறம்’, ‘மறம்’ என்னும் தமிழ்ச் சொற்களை ‘அரம்’, ‘மரம்’ எனவும், ‘மன்றம்’, ‘கன்று’ என்னும்  தமிழ்ச் சொற்களை ‘மந்ரம்’, ‘கந்ரு’ எனவும் ‘Forfces, Fourth’என்னும் ஆங்கிலச் சொற்களை ஜீல், ஜெனித் எனவும் உச்சரிக்குங்கால் நாம் தப்பென்று கூறுவதையும் நமது ஆங்கில நண்பர்கள் சிரிப்பதையும் போன்றனவேயன்றி வேறல்ல. தெய்வ பாஷையயன்றும் பூரண பாஷையயன்றும் பல பாஷை களுக்கும் தாய்ப்பாஷையயன்றும் சொல்லப்படுகிற சம்ஸ்கிருத பாஷை எழுத்துக்களோடும் பல புதுமைகளையும் திருத்தங்களையும் கொண்டுள்ள பாஷையயன்று சொல்லப்படுகிற வங்காளிப் பாஷை எழுத்தக்களோடும் ழ,ற,ன,ய்,ரீ என்னும் எழுத்துக்களையாவது அவற்றின் ஒலிகளைக் குறிக்குங் குறிகளையாவது சேர்ப்பதற்கு நமது நண்பரவர்களும் அரவிந்தரவர்களும் முயற்சித்து வெற்றி பெறுவார்களாயின் அவர்கள் நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழிகாட்டிகளாவார்கள். பின்னர் நமது தமிழ் மக்கள் அவர்களைப் பின்பற்றத் துணிவார்கள். இதுகாறும் தமிழ்ப் பாஷை எழுத்துக்களில் குறையுளது அல்லது தமிழ்ப் பாஷையில் குறையுளது என்று கூறியுள்ளவர்களில் ஒருவரும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பூரணமாகக் கற்றுணர்ந்தவராகாவாவது காணப்படவில்லையயன்றும், அவர்கள் நம் தமிழ்ப்பாஷையைத் திருத்த முற்படுகினறார்களோ வருத்த முற்படுகின்றார்களோ என்றும் நம் தமிழ் மக்களிற் சிலர் ஐயமுறுகின்றனர். அவருடைய அவ்வையத்தை நிவிர்த்திப்பதற்காக வாவது நம் தமிழ்ப் பாஷையில் திருத்தம் செய்ய வேண்டுமென்று கூற முன் வருவார்கள்,  தமிழ் இலக்கணங்களுக்கெல்லாம் மூலமென்று சொல்லப்படத் தக்கதாயுள்ள தொல்காப்பியம் ஒன்றையும் தமிழ் இலக்கியங்களுக்கெல்லாம் சிறந்தவையயன்று சொல்லப்படத்தக்கனவாயுள்ள சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், கலிங்கத்துப்பரணி, கலித்தொகை, திருக்கோவையர் முதலியவற்றில் ஒரு சிலவற்றையுமாவது பூரணமாகக் கற்க வேண்டுவது இன்றியமையாதது. இது நிற்க.

ஒரு பாஷை சொற்களை அப்பாஷை எபத்துக்களோலேயே எழுதப்படுதல் நன்றென்றும், பிற பாஷை எழுத்துக்களால் எழுதப்படுதல் தீதென்றும் சில அறிஞர் கூறிகின்றனர். அவ்வாறு அவர் கூறுவதற்குரிய காரணங்களிலொன்று, ஒரு பாஷைச் சொற்கள் மற்றொரு பாஷை எழுத்துக்களால் எழுதப்படுமானால், நாளடைவில் உலகிலுள்ள பல பாஷைச் சொற்களும், பிற பாஷைச் சொற்களோடு கலந்து எவையயவை என்னென்ன பாஷைச சொற்களென்று தெரியாமற் போகுமென்பது. மற்றொன்று ஒவ்வொரு பாஷைக்கும் புதிது புதிதாக இலக்கணங்களும் அகராதிகளும் எழுத நேருமென்பது. இன்னொன்று, ஒவ்வொரு பாஷைஅகராதியும் இலக்கணமும் உலகத்திலுள்ள பல பாஷைகளின் பல சொற்களையும் பலமுறை எழுதப் பெற நேருமென்பது. இன்னுமொன்று, கடைசியாக உலகத்திலுள்ள சகல பாஷைகளின் சகல சொற்களையும் கொண்டுள்ள அகராதிகளும், இலக்கணங்களும் ஒவ்வொரு பாஷையிலும் எழுதப்படவும் அவற்றை ஒருவரும் கற்க முடியாமற் போகவும் நேருமென்பது. வேறு சில அறிஞர் பல பாஷைச் சொற்கள் பல சுவைப் பொருள்களுக்கு நிகராமெனவும், சிலர், சில சுவைப் பொருள்களை விரும்பாதது போல சில பாஷையினர் பிற சில பாஷைச் சொற்களை விரும்பாரெனவும் சில சுவைப் பொருள்களை சிலர் முழுப் பொருள்களாகவும், சிலர் பொடிகளாகவும், சிலர் திராவகங்களாகவும் உபயோகிக்க விரும்புவது போல சில பாஷைச்  சொற்களைச் சிலப் பாஷையினர் முழுச் சொற்களாகவும் சில பாஷையினர் சிதை சொற்களாகவும் உபயோகிக்க விரும்புவரெனவும், பல பாஷைச் சொற்களையும் பல பாஷையினரும் எடுத்தாள வேண்டுமென்பது பல சுவைப் பொருள்களையும் பல மனிதரும் உபயோகிக்க வேண்டுமென்பதை ஒக்குமெனவும், பிற பாஷைச் சொற்களை முழுச் சொற்களாகவே ஒரு பாஷையினர் எடுத்தாள வேண்டு மென்பது சில சுவைப் பொருள்களை முழுப் பொருள்களாகவே எல்லோரும் உபயோகிக்க வேண்டுமென்பதை நிகர்க்குமெனவும் ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டப்படி (பிறரை வருத்தாதவாறு) நினைக்கவும் பேசவும் செய்யவும் விடுதலே சுதந்திர இலக்கணமென்பது போல ஒவ்வொரு பாஷையாசிரியரும் விதித்துள்ள படியே அவ்வவ் பாஷையினர் பிற பாஷை சொற்களை உபயோகித்துக் கொள்ளுமாறு விடுதலே சுதந்தர இலக்கணமெனவும் கூறுகின்றனர். இருவேறு பாஷையினர் அவ்விருவருமறிந்த ஒரு பாஷை மூலமாகவே ஒருவரோடொருவர் சம்பா´ப்பாராதலால் ஒரு பாஷையின் சொற்களை அப்பாஷையினர் உச்சரிப்பது போல மற்றொரு பாஷையினர் உச்சரித்தலின்றியமையாத தன்றென்பர் வேறு சில அறிஞர். உலகத்திலுள்ள சகல பாஷைகளின் சகல சப்தங்களையும் தெரிந்தெடுத்து எந்தெந்தப் பாஷையில்  எந்தெந்த சப்தங்களில்லையோ அந்தந்த சப்தங்களைக் குறிப்பதற்குச் சில எழுத்துக்கள் அல்லது குறிகள் ஏற்படுத்தி அவற்றை அந்நிய பாஷையினரோடு எவ்வித சம்பந்தாமாவது வைத்துக் கொள்ள விரும்புகின்றவர் மாத்திரம் கற்றல் அவசியமென்பர். சிலர் அவ்வாறு அந்நிய பாஷை சப்தங்களை எடுத்தாள விரும்புவோர் அவ்வச் சப்தங்களைக் குறிக்கும் அவ்வவ் பாஷை எழுத்துக்களையே எடுத்தாளுதல் நன்மையயன்றும் அவற்றிற்குப் புதிய குறிகள் ஏற்படுத்துதல் தீமையயன்றும் கூறுவர். மேலும் சிலர் நம் தமிழ்ப் புலவரோ தமது இனிய பாஷையானது யாவராலும் எளிதாகக் கற்கப் படத் தக்கவாறு முப்பது எழுத்துக்களுக்குள் அமைந்திருக்கின்ற தென்றும், வேறு பாஷை எழுத்துக்களை இதன் எழுத்துக்களோடு சேர்த்து இதன் எழுத்தெண்ணிக்கையை அதிகமாக்கி  இதனைக் கற்பதற்குக் கஷ்டமடையுமாறு செய்தல் கூடாதென்றும், அந்நிய பாஷையினரோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பும் அரசர், வணிகர் முதலியோர் மாத்திரம் மேற்குறித்தவாறு தமிழ்ப்பாஷையில் இல்லாத பிறபாஷைச் சப்பதங்களைக் குறிக்கும் அவ்வவ் பாஷை எழுத்துக்களை கற்றாள வேண்டுமென்றும் கூறுகின்றனர். இப்புலவரிற் சிலர் றா, றோ, னா, னோ என்று எழுதப்பட்டுத் தமிழ்ப் பாஷையைக் கற்றாளுதலை இன்னும் எளிதாக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். இதுகாறும் கூறப்பட்டுள்ளவற்றையும் இவை போன்ற பிறவற்றையும் நமது நண்பரவர்கள் சிந்தித்துத் தமிழ்ப் பாஷை எழுத்துக்களிற் பிற பாஷை எழுத்துக்களையோ அவற்றின் சப்தத்தைக்  கொடுக்கும் குறிகளையோ சேர்ப்பதும், தமிழ்நாட்டுக் கிராமங்களில் உழவு தொழில் செய்து ஊரை விட்டு வெளியேறாதிருக்கும் தமிழ் மக்களும், பிற பாஷையினரின் சம்பந்தம் வேண்டாத தமிழ் மக்களும் அவற்றைக் கற்க வேண்டுவதும் அவசியம் தானா என்பதைத் தீர்மானித்து அதனைத் தக்க காரணங்களோடு நமது ஞானபாநு மூலமாக வெளியிடுவார்களாக. (செப்டம்பர் 1915, ஞானபாநு).

Pin It