சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் என்பவர் பிராமணாள் கபே என்னும் ஹோட்டலை அண்மையில் தொடங்கி நடத்தி வருகிறார் என 2012 அக்டோபர் 10-12 நாளிட்ட நக்கீரன் பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

தந்தை பெரியார் காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட “பிராமணாள் கபே” திரும்பவும் பிராமணப் பெண்மணியாகிய செல்வி ஜெயலலிதா காலத்தில், அவருடைய தொகுதியில் முளைத்திருப்பது திராவிடர் கழக அன்பர்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.  இவர்களுடைய போராட்டங்களைச் சந்திக்கத் தாம் ஆயத்தமாய் இருப்பதாகவும் தமக்கு ஆதரவாக இந்துத்துவா அமைப்புகள் இருப்பதாகவும் கிருஷ்ண அய்யர் சவால்விட்டுள்ளார்.

அதாவது, இந்துத்துவா அமைப்புகளின் துணையுடன் தமிழக அரசு ஆதரவில் எந்தக் கலகத்தையும் உருவாக்கத் தயாராகவே பிராமணர்கள் பிராமணப் பெண்மணியின் ஆட்சியில் திட்டமிட்டுப் புறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

 பிராமணர்களைப் புரிந்து கொள்ளுவோம்.  ‘பிராமணர்’ என்பது சாதிப்பெயரா?  மதப் பெயரா?

ஹோட்டல் உரிமையாளர் கிருஷ்ண அய்யர், அரசாங்கம் தமக்கு ‘பிராமணர்’ என்று சாதிச் சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் இதனால், இந்தச் சான்றிதழின் அடிப்படையில் தமக்கு வணிகம் செய்யும் உரிமை இருப்பதாகவும் கூறுகின்றார்.

சாதிப் பெயருடன் பல வணிக நிறுவனங்கள் செயல்படும்பொழுது பிராமணர்களுக்கு அந்த உரிமை இல்லையா?  என்னும் கேள்வி நியாயமானதாகவே இருக்கிறது. 

ஆனால் “பிராமணர்” என்று சாதிச் சான்றிதழ் வழங்கி இருப்பது வரலாற்றுத் தவறு ஆகும்.  “பிராமணர்” என்பது ஒரு சாதிப் பெயர் இல்லை என்பதும், அது ஒரு மதத்தின் பெயர் என்பதுமே வரலாற்று உண்மையாகும்.  இதை பிராமணர்கள் மறைத்து மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் என்னும் உண்மை மறைந்து கிடக்கிறது.

இதனால், பிராமணர்கள் தங்களைச் சாதியாகவும், மதமாகவும் காட்டி, இரட்டை வேடமிட்டு வருகின்றார்கள்.  எவ்வாறு என்றால், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்குத் தலைமை இடம் எது? என்று கேட்டால் உண்மை தெரிந்தவர்கள் காஞ்சி சங்கரமடம் என்று பதில் கூறுகின்றார்கள். 

காஞ்சி சங்கரமடம் ஒரு சாதிக்குத் தலைமை இடமா?  அல்லது ஒரு மதத்திற்குத் தலைமை இடமா? என்று கேட்டால் இரண்டுக்கும் தலைமை இடம் என்னும் பதில் வருகிறது.

அப்படியானால், அது எந்த மதத்திற்குத் தலைமையிடம்?  என்னும் கேள்விக்கு இந்து மதத்திற்குத் தலைமை இடம் என்னும் பதில் வருகிறது.

அப்படியானால் இந்து மதக் கோவில்களாகிய சைவ, வைணவக் கோவில்களில் காஞ்சி சங்கராச்சாரியார் பூஜை செய்கிறாரா?  என்னும் கேள்வியைக் கேட்டால் இல்லை;  அவர்கள் இந்து மதக் கோவில்களில் கொடிக்கம்பத்தைத் தாண்டி உள்ளே போக மாட்டார்கள்;  போனால் அவர்கள் தீட்டுப்பட்டு விடுவார்கள் என்று பதில் வருகிறது.

அப்படியானால், இந்து மதக் கோவில்களை இழிவாகக் கருதும் இவர்கள் எவ்வாறு இந்து மதத்திற்குத் தலைவர்கள் என்று நம்பப்படுகின்றார்கள்?  என்னும் கேள்வி எழுகின்றது.

இவர்கள் இந்து மதத்திற்குத் தலைவர்கள் அல்லர் என்பதும் இந்துத்துவாக் கொள்கைக்கு மட்டுமே தலைவர்கள் என்பதும் இந்து மத வரலாறும் இந்துத்துவா வரலாறும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரிகிறது.

சங்கரமடம் இந்துத்துவாக் கொள்கைக்குத் தலைமை தாங்கும் இடமே தவிர இந்து மதத்திற்குத் தலைமை இடம் இல்லை என்னும் வரலாற்று உண்மை மறைக்கப்பட்டு மறைந்து கிடக்கிறது.

‘இந்து மதம்’ என்பது சைவ, வைணவ மதங்களைக் குறிக்கிறது என்பது விளங்குகிறது.  ஆனால் ‘இந்துத்துவா’ என்பது எங்களுக்கு விளங்கவில்லையே?  என்னும் கேள்வி பொது மக்களிடம் இருந்து வருகிறது.

‘இந்துத்துவா’ என்றால் என்ன?  என்னும் கேள்விக்கு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களும் இந்தியாவின் உச்சநீதிமன்றமும் கொடுக்கும் விளக்கம் வருமாறு:-

“இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை; இது ஒரு வாழ்க்கை முறை.  கடவுள் நம்பிக்கைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்பது ஆகும்.

அதாவது, பிராமணர்கள் பிறப்பால் சாதியில் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் அனைவரும் பிராமணர்களை ஆதரிக்குமளவுக்குச் சாதியில் உயர்ந்தவர்கள் என்றும், எதிர்க்கும் அளவுக்குச் சாதியில் இழிவானவர்கள் என்றும் ஏற்றுக்கொண்டு வாழும் வாழ்க்கை முறைக்கு ‘இந்துத்துவா’ என்பதும் பெயராகும் என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது.

அதாவது, வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறிய அந்நியர்களாகிய ஆரியப் பிராமணர்களுக்கு, இந்தியாவைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு உயர்சாதிப் பட்டமும் அந்நியர்களை எதிர்த்தவர்களுக்குக் கீழ்சாதிப் பட்டமும் வழங்கியதை நியாயப்படுத்தியதை ஏற்றுக்கொண்டு வாழும் வாழ்க்கை முறைக்கு “இந்துத்துவா” என்பது பெயராகும்.  தன்மானமுள்ள இந்தியர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்கள்.

இவ்வாறு இந்த வாழ்க்கை முறையை எதிர்த்தவர்கள் கீழ்சாதியினர் என இகழப்பட்டதுடன், துன்புறுத்தப்பட்டு கொலையும் செய்யப்பட்டனர் என்பது வரலாறு.

இந்த வரலாற்றின்படி இந்து மதமாகிய சைவ, வைணவ ஆலயங்களில் பூசை செய்து வந்த பக்திமிக்க தமிழ் ஞானிகள் கொலை செய்யப்பட்டு, அவர்கள் இடத்தில் ஆரியப் புரோகிதர்களாகிய ஸ்மார்த்த்அரின் அடிமைகளாகிய அவர்களுடைய இந்துத்துவாக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் பூசாரிகளாக வைக்கப்பட்டமையை வரலாறு கூறுகிறது.

வரலாற்றின்படி திருவரங்கம் ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாகப் பூசை செய்து வந்த பாணர் குடியைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் கொலை செய்யப்பட்டு, இந்துத்துவா வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்ட ஸ்மார்த்தர்களுக்கு அடிமைகளாக உள்ள பட்டாச்சாரியர்கள் பூசாரிகளாகப் பிராமணர்களால் நியமிக்கப்பட்டனர் என்பது வரலாறு.

அவ்வாறே, சிதம்பரம் நடராசப் பெருமான் கோவிலில் பரம்பரை பரம்பரையாகப் பூசை செய்து வந்த திருவள்ளுவர் குடியைச் சேர்ந்த நந்தனார் கொலை செய்யப்பட்டு இப்பொழுது அங்கிருக்கும் தீட்சிதர்கள் பிராமணர்களால் நியமிக்கப்பட்டனர் என்பது வரலாறு.

திருப்பாணாழ்வார், நந்தனார் ஆகியோரது காலத்திற்குப் பின்னர் ஸ்மார்த்தர்களாகிய ஆரியப் பிராமணர்களின் அடிமைகள் கையில் சைவக் கோவில்களும் வைணவக் கோவில்களும் உட்படுத்தப்பட்டு சைவ, வைணவ சமயங்கள், ஸ்மார்த்தர்களின் இந்துத்துவாக் கொள்கைக்கு அடிமைப்பட்டன.  சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் எழுந்த தமிழர்களின் பக்தி இயக்கத்தில் இருந்து எழுந்த தமிழர் சமயம் என்பது வரலாறு.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையாகிய மனுநூல் கொள்கைக்கு இந்துத்துவா (Hinduism) என்னும் புதுப் பெயர் கொடுக்கப்பட்டது.  இந்துத்துவாக் கொள்கைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களின் சமயங்களான சைவ, வைணவத்திற்கு இந்து மதம் (Hindu Religion) என்னும் புதுப்பெயர் எழுந்தது.

இந்துத்துவா (Hinduism), இந்து மதம் (Hindu Religion) ஆகிய இரு பெயர்களும் 1794இல் மனு நூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த வில்லியம் ஜோன்ஸ் காலத்திலிருந்து உருவாக்கப்பட்டவை ஆகும்.

ஆகவே, மனுநூல் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையாகிய இந்துத்துவாக் கொள்கை, தமிழ் இனத்திற்கு எதிரான ஆரியப் புரோகிதர்களால் உருவாக்கப்பட்ட கொள்கையாகும்.

ஆரியப் புரோகிதர்கள், அவர்களுடைய வேதமுறைப்படி ஆடு மாடுகளை யாகத் தீயில் சுட்டு, சோமபானம் சுராபானம் முதலிய மது வகைகளுடன் உண்டு, குடிக்கும் வாழ்க்கை முறையாகிய வேதமுறைப்படி வாழ்ந்து வந்தார்கள் என்பது வரலாறு.

சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சிறப்புக் கொடுப்பது வேதாந்த சமயமாகிய தமிழர் சமயம்.

சிவனை வழிபடுபவர்கள் “சைவர்கள்” என்றும்

விஷ்ணுவை வழிபடுபவர்கள் “வைணவர்கள்” என்றும்

பிரமனை வழிபடுபவர்கள் “பிராமணர்கள்” என்றும்

இருக்க வேண்டும்.  ஆனால், பிரமனை வழிபடுபவர்கள் “பிராமணர்” என்று இல்லாமல் பிரமன் பெயரால் சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்தவர்களை ஏமாற்றுகிறவர்கள் பிராமணர் என்பது நடைமுறையாக உள்ளது.  எவ்வாறு என்றால்,

வேத முறைப்படி யாகத் தீயில் ஆடு மாடுகளைச் சுட்டு உண்டு வந்த ஆரியப் புரோகிதர்களை, புலால் உண்ணாத வேதாந்தக் கொள்கையையுடைய சைவ, வைணவ  சமயங்களை அடிமைப்படுத்துவதற்காக, சைவச் சின்னமாகிய திருநீற்றை நெற்றியில் அணிந்து கொண்டு வைணவப் பெயராகிய ‘நாராயணா’ என்பதை வாயினால் கூறிக் கொண்டு “நானே பிரம்மமாகிய கடவுள்” எனக் கூறிக்கொண்டு பிரமன் பெயரால் ஏமாற்றுகிறவர்கள் பிராமணர்கள் என்பது காஞ்சி சங்கரமடத்தில் இன்றும் இருக்கும் நடைமுறை.

அதாவது, புலால் உண்ணும் ஆரியப் புரோகிதர்கள், தமிழர்களின் வேதாந்த சமயப் பெயர்களில் ஒன்றான “பிரமன்” என்பதைப் “பிரமம்” எனத் திரித்து, புலால் உண்ணாத கொள்கையையுடைய பிராமணர்கள் என்று உலக மக்களை ஏமாற்றுகிறவர்கள் தங்களைப் பிராமணர் எனக் கூறுகிறார்கள் என்பது எவராலும் மறுக்க இயலாத வரலாற்று உண்மையாகும்.

இந்த வரலாற்று உண்மை அண்மையில் கும்பகோணத்தில் காஞ்சி சங்கரமடத்தால் நடத்தப்பட்ட யாகத்தில் பிராமணர்கள் ஆடு, மாடுகளைச் சுட்டுத் தின்று மாட்டிக்கொண்ட நிகழ்ச்சியில் உலக மக்களுக்கு வெளிப்பட்டது.

ஆகவே, வேத முறைப்படி ஆடு மாடுகளைச் சுட்டுத் தின்னும் ஆரியப் புரோகிதர்களாகிய சாதியினர், தமிழர்களின் வேதாந்தக் கொள்கையையுடைய பிராமண மதத்தினராக, புலால் உண்ணாதவர்களாக வேஷம் போட்டுக் கொண்டு உலக மக்களை ஏமாற்றுகிறவர்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.

இந்த நிலையில் கிருஷ்ண அய்யர் அவருடைய சாதியின் பெயராகிய ஆரியப் புரோகிதர் என்று அரசாங்கத்தில் சாதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமேயன்றி, உலக மக்களை ஏமாற்றும் மதம் பெயராகிய “பிராமணர்” என்று சாதிச் சான்றிதழ் பெற்றது முதல் தவறு.

ஆடு, மாடுகளைச் சுட்டு, மறைவாகத் தின்று வரும் ஆரியப் புரோகிதர்களாகிய சாதியினர், பிராமணர் என்னும் மதப் பெயரைப் பயன்படுத்தி, புலால் உண்ணாதவர்களை ஏமாற்றித் தம் ஹோட்டலுக்கு வரவழைக்கும் ஏமாற்று இரண்டாவது தவறு ஆகும்.

“பிராமணாள்” என்னும் பெயரையுடைய ஏமாற்றுக்காரர்கள் இந்த ஹோட்டலின் மறைவான இடத்தில் ஆடு, மாடுகளைச் சுட்டு, சோமபானம், சுராபானம் முதலிய மது வகைகளுடன் உண்டு குடித்து வரமாட்டார்கள் என்பதை யாராவது உறுதிப்படுத்த முடியுமா? என்னும் கேள்விக்குக் கும்பகோணம் நிகழ்ச்சி தக்க பதில் கொடுக்கிறது.

இந்த நிலையில் சுட்ட கறியையும் பட்டைச் சாராயத்தையும் மறைவாக உண்டு, குடிக்க விரும்புகிறவர்களை வரவேற்கவே திருவரங்கத்தில் “பிராமணாள் கபே” திறக்கப்பட்டுள்ளது என்பது வரலாற்று உண்மையாகும்.

திருவரங்கத்தில் “பிராமணாள் கபே” திறந்திருக்கும் பிராமணர்கள்,

  1. உண்மையாகிய சத்தியத்தை அறியாதவர்கள்
  2. சொந்த அறிவு இல்லாதவர்கள்
  3. மனிதத் தன்மை இல்லாதவர்கள்
  4. பக்தி இல்லாதவர்கள்
  5. கடவுளைத் தெரியாதவர்கள்
  6. பித்தேறிய பைத்தியக்காரர்கள்
  7. அறிவில்லாத மூடர்கள்

ஆகிய ஏழு குணங்களையும் உடையவர்கள் என்று திருமந்திரத்தை எழுதிய திருமூலர் கீழ்க்காணுமாறு கூறியுள்ளார்.

“சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி

ஒத்தவிடயம் விட்டோரும் உணர்வின்றி

பத்திஇன்றி பரன் உண்மைதானின்றி

பித்தேறும் மூடர் பிராமணர்தாமன்றே”

மேலே கூறப்பட்டுள்ள ஏழு குணங்களும் உடையவர்களை வருக வருக என வரவேற்கிறது திருவரங்கத்திலுள்ள பிராமணாள் கபே.

நியாய புத்தியுடையவர்கள் இந்த ஹோட்டலுக்குள் நுழைவார்களா?  என்பதை எண்ணிப் பார்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

மேலே கூறப்பட்டுள்ள செய்திகளின் சுருக்கம் தமிழ்நாடு பிராமணர் சங்கத்திற்கும் தமிழ்நாட்டிலுள்ள இந்துத்துவா அமைப்புகளுக்கும் 27-09-2012 அன்று பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டு, இதற்கு மறுப்புக் கொடுக்க தொலைக்காட்சியின் வழி இதைப் பற்றிய கலந்துரையாடலுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளது.

சூழ்ச்சிக்காரர்களாகிய பிராமணர்கள் நம்மோடு கலந்துரையாடலுக்கு வருவார்கள் என்னும் நம்பிக்கை நமக்கு இல்லை.

தயவு செய்து நீங்கள் தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவருக்கு, அவர்கள் எங்களுடன் கலந்துரையாடல் நடத்த முன்வருமாறு எழுதுங்கள்.  அப்பொழுதாவது மறைக்கப்பட்டு, மறைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள் வெளிவர உதவுவார்களா? பார்ப்போம்.  நீங்கள் எழுத வேண்டிய முகவரி

தலைவர்,

தமிழ்நாடு பிராமணர் சங்கம்,

75, சர் சி.பி. இராமசாமி ஐயர் சாலை,

ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

 

இப்படிக்கு,

மு. தெய்வநாயகம்

தொடர்பு முகவரி:

பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் M.A., Ph.D.,

ஒருங்கிணைப்பாளர்,

அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு,

278,கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம்,

சென்னை – 600023 தொலைபேசி: 26743842

அலைபேசி: 9444817394, 9840003842

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கடைசித் தகவல்: தொடர் போராட்டங்களின் விளைவாக, 'பிராமணாள் கபே' கடையின் கட்டிட உரிமையாளர் கடையைக் காலி செய்யக் கூறி, உணவகம் மூடப்பட்டு விட்டது.  எனினும் 'பிராமணாள் கபே'யின் உரிமையாளர் கிருஷ்ண அய்யர், தாம் சொந்தக் கட்டிடம் கட்டி, பெரிய போர்டு ஒன்றில் 'பிராமணாள் கபே' என எழுதி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.  எனவே போராட்டம் முடிவு பெறவில்லை.  

Pin It