வளர்ந்த நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில், பொதுப் போக்குவரத்து (public transport) கூட்டு நுகர்வு (collective consumption) என்ற பெயா¢ல் சலுகை விலையிலேயே அளிக்கப்படுகிறது. அதுவும் யுகாந்திர காலம் காக்க வைத்துவிட்டும், ஜடப் பொருட்களை அடுக்கிக் கொண்டு போவது போல் மக்களை அடுக்கிக் கொண்டும் போகும் நமது போக்குவரத்துக் கழகங்களைப் போல் அல்லாமல் பொறுமையைச் சோதிக்காமலேயே பயணம் தொடங்கும் விதமாகவும், நன்றாக அமர்ந்து கொண்டும் பயணம் செய்யும் விதமாகவுமான வசதியைச் சலுகை விலையில் அளிக்கிறார்கள். அப்படி அளிக்காவிட்டால், அந்நாட்டு மக்கள் தங்களால் பணியிடங்களுக்குப் பயணம் செய்ய முடியவில்லை என்று கூறி, முதலாளிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முடக்கி, மூலதனத்திற்கு இலாபம் கிடைப்பதில் முட்டுக் கட்டையைப் போட்டுவிடுவார்கள்.

 அந்நாடுகளில் பொதுப் போக்குவரத்தில் நஷ்டம் ஏற்படுவதைக் கண்டு கொள்ளாத உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் நம் நாட்டு அரசாங்கங்ளிடம் போக்குவரத்து நிறுவனங்களில் நஷ்டம் ஏற்படக் கூடாது என்றும் அவை சுயசார்புடன் இயங்க வேண்டும் என்றும் நிபந்தகைளை விதிக்கின்றன. ஏனெனில் நாம் தான் கடைந்தெடுத்த இளிச்சவாயர்களாயிற்றே? இங்கு நம் முதலாளித்துவ அறிஞர்கள் உலக நிதி நிறுவனங்களின் எதேச்சதிகாரக் கட்டளைகளை நியாயப்படுத்தும் விதமாக, இலவசங்கள், சலுகைகள் எல்லாம் மக்களைச் சோம்பேறிகளாக்கி விடும் என்று வாய் கிழியப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் முதலாளிகள் சுருட்டிக் கொள்ளும் அளவுக்கு மீறிய இலவசங்களைப் பற்றியும் சலுகைகளைப் பற்றியும் வளர்ந்த நாடுகளில் அளிக்கப்படும் இலவசங்களைப் பற்றியும் சலுகைகளைப் பற்றியும் வாயைத் திறப்பதே இல்லை.

 இதுவரையிலும் உழைக்கும் மக்களின் விட்டுக் கொடுக்காத போராட்டம் தான் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் உந்துவிசையாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கு, முதலாளிகளின் மனதிற்குப் பிடிக்காத மக்கள் நலத் திட்டங்களே சா¢யான வழி என்ற நிலைமைகளும் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ,

 பெல்ஜியம் நாட்டில் ஹாஸெல்ட் (Hasselt) நகா¢ல் 1996 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு 1997 ஆம் ஆண்டு முதல் பேருந்துப் பயணம் முழுமையாக இலவசமாக்கப்பட்டது. அது மட்டுமல்ல; தனியார் வாகனங்களை உபயோகிப்பதற்கான வா¢களை உயர்த்தியும், அவற்றில் பயணம் செய்தால் போய்ச் சேர வேண்டிய இடங்களை அடைய வெகுவாகத் தாமதம் ஆகும்படி விதிகளைக் கடுமையாக்கியும் இருக்கிறார்கள். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட உடன் பேருந்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகா¢த்தது. 9 ஆண்டுகளில்13 மடங்கு அதிகா¢த்துள்ளது. அதனால் தனி வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, அதனால் புகை உமிழ்வு குறைந்து, சுற்றுப்புறத் தூய்மை வெகுவாக அதிகா¢த்துள்ளது. பேருந்துகளின் எண்ணிக்கை அதிகா¢த்தால் சாலைகளில் அவை நிரம்பி வழிந்து போக்குவரத்து நொ¢சல் அதிகமாகிவிடும் என்று இங்குள்ள அறிஞர்கள் பயமுறுத்துகிறார்கள். ஆனால் ஹாஸெல்ட் நகா¢ல் பேருந்துகளின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகா¢த்த பிறகு போக்குவரத்து நொ¢சல் வெகுவாகக் குறைந்துவிட்டதாம்.அது மட்டுமல்ல; விபத்துகளும் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். மேலும் வாகன நிறுத்த இடங்கள் (parking space) எல்லாம் மற்ற உபயோகங்களுக்குக் கிடைத்து, மக்களின் செளகா¢யங்கள் மிகவும் அதிகா¢த்து உள்ளதாம்.

 

 இது போன்ற செய்திகளை முதலாளித்துவ அறிஞர்களும் ஊடகங்களும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் அக்கறை காட்டுவதே இல்லை. ஆனால் சிற்சில சமயங்களில் அவர்கள் அறியாமலேயே சில உண்மைகளை வெளியிட்டு விடுவார்கள். புது டெல்லியில் உள்ள தன்னார்வத் தொண்டு அமைப்பு ஒன்று டெல்லியில் வாகனப் பெருக்கத்தின் விளைவுகளை அராய்ந்து அதை 24.1.2011 அன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் மூலம் வாகனப் பெருக்கத்தின் விளைவாக அதிகா¢த்துள்ள புகை உமிழ்வினால் 2009 ஆம் ஆண்டில் சுகாதாரத்திற்கான செலவு ரூ.2,450 கோடி அதிகா¢த்து உள்ளது எனத் தொ¢ய வந்துள்ளது. மேலும் புது டெல்லியில் உள்ள சுற்றுச் சூழல் அறிவியல் மையத்தின் உதவி இயக்குநர் அனுமிதா செளத்தி¡¢ (Anumita Chowdry) என்பவர் டெல்லியில் உள்ள பேருந்து மற்றும் மின்சார ரயில் பயணங்களை இலவசமாக்கிவிட்டு அவற்றின் எண்ணிக்கையைத் தேவையான அளவிற்கு அதிகமாக்கிவிட்டால் சுற்றுச் சூழல் வெகுவாகத் தூய்மை அடைந்துவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்தியாவில் (பொதுவுடைமைக் கருத்தைத் தங்கள் கொள்கையாகப் பிரகடனப் படுத்தியுள்ள கட்சிகள் உட்பட) எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்கள் நலனுக்காகப் பாடுபடுவதாக மார்தட்டிக் கொள்ளும் எந்த ஒரு தொண்டு நிறுவனமும் இக்கருத்தை முன்னெடுக்வும் வளர்த்தெடுக்கவும் முன் வரவில்லை.

 ஹாஸெல்ட் நகா¢ன் இலவசப் பொதுப் போக்குவரத்தினால் விளைந்துள்ள நன்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட ஸ்காட்லாண்ட் சோஷலிஸ்ட் கட்சியினர் ஸ்காட்லாந்தில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்க வேண்டும் என்றும் தனி வாகனங்களை உபயோகிக்க முடியாத அளவிற்கு விதிகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும் மார்ச் 2007 முதல் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் (பார்க்கவும் www.freetransport.org). ஸ்காட்லாந்து சோஷலிஸ்ட் கட்சியனர் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெறுவார்களா?

 ஹாஸெல்ட் நகரத்தில் இலவசப் பொதுப் போக்குவரத்து முறை கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாகவும் மிகுந்த பயனை ஈட்டும்படியும் நடைபெறுவதைக் கண்ட பிறகும் பெல்ஜியம் நாட்டின் பிற பகுதிகளில் இத்திட்டத்தை வி¡¢வாக்க முடியாத காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் ஸ்காட்லாந்து சோஷலிஸ்ட் கட்சியனா¢ன் போராட்டம் வெற்றி பெறுமா என்பதைப் பற்றியும் தொ¢ந்து கொள்ள முடியும்; இப்போராட்டம் செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காத காரணங்களையும் பு¡¢ந்து கொள்ள முடியும். அக்காரணங்கள் யாவை?

 இன்று உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவ உற்பத்தி முறை தான் நடப்பில் உள்ளது. சோஷலிச உற்பத்தி முறையை நடப்பில் கொண்டுள்ள நாடுகள் குற்றுயிரும் குலையுயிருமாக உள்ளன.

 முதலாளித்துவ உற்பத்தி முறையின் படி இலாபத்தை ஈட்டக் கூடிய பொருட்கள் தான் உற்பத்தி செய்ய முடியும். மக்களுக்கு மிக மிக......மிக அவசியமாகத் தேவைப்படும் பொருட்களாக இருந்தாலும் அவை போதிய லாபத்தை ஈட்டுத் தர முடியாது என்றால் அவை உற்பத்தி செய்யப்பட மாட்டா. இதன் காரணமாக உழைக்கும் மக்களின் ஆற்றல் குன்றி, முதலாளிகளுக்கு இலாபம் தரும் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடுமானால், முதலாளிகளுக்குத் தேவைப்படும் அளவிற்கு உழைக்கும் மக்களின் ஆற்றல் பெருகுவதற்காக, தேவையான அளவிற்கு (மட்டும்) இலாபம் ஈட்டாத பொருட்களையும் உற்பத்தி செய்வார்கள். சில சமயங்களில் உழைக்கும் மக்களின் போராட்டம் கட்டுக்கடங்காமல் போய் விடக் கூடாது என்பதற்காகவும் இலாபம் ஈட்டாத பொருட்களை உற்பத்தி செய்வார்கள். அதாவது முதலாளிகள் இலாபச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இலாபச் சக்கரம் சுழலுவதற்கு இடையூறாக வரும் எதையும் தங்கள் உயிரைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளை விட அதிக முயற்சிகளை எடுத்து எதிர்ப்பார்கள். ஏனெனில் இம்முறையில் தான் மனிதர்களை அடிமை கொள்ளும் சுகத்தை முதலாளிகளால் அனுபவிக்க முடியும்.

 ஹபஸெல்ட் நகரத்தில் சுற்றுச் சூழலை மேம்படுத்தவில்லை என்றால் உழைக்கும் வர்க்கம் நிலைத்திருக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டவுடன் பொதுப் போக்குவரத்து முறையை இலவசமாக்கியது மட்டுமல்லாமல் தனி வாகனப் பயணத்தைக் கட்டுப்படுத்தியும் வைத்துள்ளனர். அதாவது உழைக்கும் வர்க்கம் போராடிப் பெறுவதை (முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி விளைவித்துள்ள) சுற்றுச் சூழல் கேடு பெற்றுத தந்துள்ளது. இச்சலுகை சிறு அளவாக இருப்பதாலும், ஹாஸெல்ட் நகரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை வேறு இடங்களில் ஈடு செய்து கொள்ள வழி இருப்பதாலும் முதலாளிகளும் முதலாளித்துவ அரசுகளும் இதை ஒப்புக் கொண்டுள்ளன. இத்திட்டத்தை நாடு முழுவதும் வி¡¢வாக்கினால் சிற்றுந்து உற்பத்தித் தொழிலில் செய்யப்பட்டுள்ள மூலதனம் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட வேண்டும். இது பொருளாதார நெருக்கடியை மேலும் கூர்மைப்படுத்தும். இதை முதலாளிகள் விரும்பமாட்டார்கள்.

 முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும், முதலாளித்துவ ஊடகங்களும் உலகமே அழிந்து போவதாக இருந்தாலும், அழியட்டும் என்று விடுவார்களே யொழிய மனிதர்களை அடிமை கொள்ளும் சுகத்தை விட்டுக் கொடுத்து, சுற்றுச் சூழல் கேட்டிலிருந்து உலகததைக் காக்க முன் வரமாட்டார்கள். அக்கடமை உழைக்கும் வர்க்கத்தையும் உண்மை அறிஞர்களையுமே சார்ந்தது.

 இன்று சுற்றுச் சூழல் கேட்டிலிருந்து மீளவும், புவி வெப்ப உயர்விலிருந்து உலகைக் காக்கவும் மனித இனம் மேற்கொள்ள வேண்டிய தவிர்க்கக் கூடாத கடமை முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுத்து விட்டு, சோஷலிச உற்பத்தி முறையை நடைமுறைப்படுத்துவது தான். சோஷலிசத்தைப் பற்றி முதலாளித்துவ அறிஞர்களும் போலி சோஷலசவாதிகளும் செய்து வைத்திருக்கும் தவறான பிரச்சாரங்களைப் பற்றி மக்களிடையே விளக்குவதும் உண்மையான அறிஞர்களின் முதன்மையான கடமையாகும்.

- இராமியா

Pin It