வேளாண்மை என்பது செயல்முறைபடுத்தப்படுகின்ற பயிர்ச்சாகுபடி அறிவியலின் ஒரு கிளையாகும்.வயலை உழுது, பயிர் வளர்த்து, கால்நடைகள் போன்றவற்றை வளர்த்து அறிவியல் அடிப்படையில் பண்ணையும் நடத்தும் கலையேயாகும். இதில் மூன்று பகுதிகள் உள்ளன.

1. புவியில் வளர்ப்பு என்பது வயலில் சாகுபடி.

2. நீரில் வளர்ப்பு என்பது தண்ணீரில் சாகுபடி.

3. காற்றில் வளர்ப்பு என்பது காற்றில் சாகுபடி.

எனவே, வேளாண்மை என்பது புவியில் வாழும் உயர்ந்த வகை உயிரினங்கள் மேம்பாட்டிற்குத் தேவையான பயிர் வளர்ப்பிற்குப் புதுப்பிக்கப்படும் ஆற்றல்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்திச் செயல்படுத்தப்படும் செயல்முறையாகும். இம்முறைகள் பல வகையான அடிப்படை அறிவியலைத் தன்ன கத்தே கொண்டுள்ளது.

பயிர்ச்சத்துக்கள், பயிரின வளர்ச்சிப் பாகுபாடு, சுற்றுச்சூழல் போன்ற தொழில் நுட்பங்கள் வளர்ந்தன. அறிவியல் ஆய்வு முடிவுகள் வயலில் செயல்படுத்தப்படுகின்றன. பல்துறை  ஆய்வுகளின் முடிவுகள் பயிர் உற்பத்திக்கான செயல்முறைக் கல்வியாக்கப்பட்டன.

Pin It