இன்னமும்
சளிபிடித்திருக்கிறது.
என்றால்
அம்மா சுக்குக் கசாயம் போட்டுத்
தருகிறாள்.

சுகர் இருக்கிறது
என்றாலும்
அப்பா சர்க்கரை குறையாமல்
காபி குடிக்கிறார்

இவளைத்தான்
கட்டுவேன் என ஒற்றைக்காலில்
நிற்கிறான் அண்ணன்

ஒழுங்கா படிடா
கவிதை வேணாம்டா
என்றாலும்
எழுதிக்கொண்டுதான்
இருக்கிறேன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.