சலூன்களிலும்
டீக்கடைகளிலும்
திரைக்கதையின்
திருப்பங்கள்பற்றி விவாதிக்கும்
கோடம்பாக்கத்தின்
கனவுப் பிள்ளைகள்.
தினந்தோறும்
நட்சத்திரங்களை
பார்த்துக் கொண்டிருந்தாலும்
வெளிச்சத்தை அறியாத
இருட்டின் குழந்தைகள்.
சென்னை வீதிகளில்
பைலோடும்
பசியோடும்
தயாரிப்பாளர் தேடி
பறந்து கொண்டிருக்கும்
வானம் இழந்த
வண்ணத்துப் பூச்சிகள்.
”தந்திரத்திற்காக
உயிரை பலிகொடுத்த
தியாகிகள் போல்
கனவுகளுக்காக
தங்கள் இளமையை
பலிகொடுக்கும்
கருப்பு வெள்ளை
மெழுகுவர்த்திகள்
நான்
எழுதிக் கொண்டிருக்கும்
இந்தக் கவிதையின்
ஒவ்வொரு வார்த்தைகளும்
நிறைவேறாத கனவுகளோடு
இறந்து போன
உதவி இயக்குநர்களின்
ஆத்மாக்கள்.
தாமரை - மார்ச் 2012
உதவி இயக்குநர்கள்
- விவரங்கள்
- அருண்பாரதி
- பிரிவு: தாமரை - மார்ச் 2012
More articles by அருண்பாரதி
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.